பக்கம்:தாய் மண்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

கிறேன். தியாகத்தைப் போற்றுகிறதுக்கு நம்ம மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க. அதுதான் எனக்குப் பெரிதும் ஆறுதலா கயிருக்குதுங்க! நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க. உங்க அன்பை எப்பவும் நான் மதிச்சு வழிபட்டுக்கிட்டிருப்பேன்!” என்று எல்லோரையும் பார்த்துக் கைகூப்பினுன் மோகன் தாஸ்.

எத்துணை அழகான கருத்துக்களைத் தாய்நாட்டு வீரன் செப்பிவிட்டான்.

‘வாழ்க தமிழ்நாட்டு வீரர் மோகன்தாஸ்!” என்னும் புகழுரைகள் ஓங்கி அடங்கின.

கூட்டம் கலைந்தது. தொண்டர் தலைவர் தனிப்பட வந்து விடை பெற்றார். போகையில் குறிப்பாகத் தமிழரசியிடமும் சொல்லி சென்றார்.

மோகன்தாஸ் சிறுபொழுது அப்படியே மோனத்தில் இருந்தான். பிறகு, கண்களே மலர மலர விழித்தான். கால் பகுதிகளைத் தடவிவிட்டுக் கொண்டான். அவன் செயலைக் கண்டதும், அவனைப் பெற்ற தாய் அவன் காலடியில் அமர்ந்து தடவிக் கொடுத்தாள்.

ஒரு சிறுவன் வந்து மோகன்தாசுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, “எனக்கும் வயசு வந்தானதும் நானும் உங்க மாதிரி தான் ஜம்முனு ஜவான் ஆகிவிடுவேன்’ என்று வீர சபதம், எடுத்துக் கொண்டான். அவனே அள்ளி எடுத்து உச்சி மோந்தான் மோகன்தாஸ்.

‘இந்த மாதிரி செல்வங்கள் இருக்கையிலே நம்ம நாட்டுக்கு என்னங்க கவலை!... பம்பாயிலிருந்து ஒன்பது வயசுப் பையன்-சாஷின் தர்கா என்று பேர்-விமானப் படை அதிபர் ஏர்மார்ஷல் அர்ஜுன் சிங் அவர்களுக்கு எழுதின லெட்டரிலே, தானும் பட்டாளத்திலே சேரத் தயார்னு எழுதியிருக்கிருளும். அவன் கிட்டே துப்பாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/87&oldid=664160" இலிருந்து மீள்விக்கப்பட்டது