பக்கம்:தாய் மண்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இருப்பதாகவும் இங்கிலீஷிலே லெட்டர் எழுதியிருக்காளும்: தம்பி, உன்னைப் போல உள்ள சிறுவர்கள்தானே நம்ம. நாட்டின் நாளையத் தலைவர்கள்! உன் வீரம் வாழ்க!” என்று பாராட்டி வாழ்த்தி வழி அனுப்பினன்.

பிறகு, மோகன்தாஸ் தன் கழுத்தில் இருந்த மாலைகளைக் கழற்றிஞன். தமிழரசி போட்ட மாலையை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, கண் இமைக்கும் நேரம் கண் இமைக் காமல் அதையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மீண்டும் பார்வையை உயர்த்திய தருணத்தில், இன்னமும் சிந்தனே வசப்பட்டவளாகவே தமிழரசி அங்கே நிற்பதையும் அவன் கவனித்தான்.

‘உங்க பேரு என்னுங்கம்மா?’ என்று அவள் நெற்றிப் பொட்டைப் பார்த்துக் கொண்டே விசாரித்தான்.

“தமிழரசி!”

  • ரொம்ப அழகான பேர்!”

“தமிழ் சேர்ந்த தமிழ்ப் பேராச்சுங்களே!”

சீதை தன் அண்ணனின் பக்கத்தில் அமர்ந்தாள். ஈரம் தண்டியது.கோரைப் பாயை இழுத்துவிட்டாள், தமையனின் ழுழுக்கால் சட்டையில் ஈரம் படாமல். ‘அக்கா மனசு. ரொம்ப அழகானது அண்ணுச்சி!’ என்று சொல்லி, அவளைப் பற்றிய விவரங்களை எடுத்து வைத்தாள். .

அவன் கவனமாகச் செவிமடுத்தான்.

“'உங்க நாட்டுப் பாசத்துக்கும் தேசக் கடமைக்கும் என் சார்பிலேயும் என் பள்ளிக்கூடத்தின் சார்பாகவும் நன்றியைத். தெரிவிச்சுக்கிறேன். நான் போயிட்டு வாரேனுங்க!” என்று விடை கோரினுள் தமிழரசி,

அவன் இதயம் தோய்ந்த சிரிப்பால் அவளுக்கு வணக்கம் சொல்லி, ராணுவ முறையில் ஒரு சல்யூட் வைத்து விடை கொடுத்தான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/88&oldid=664161" இலிருந்து மீள்விக்கப்பட்டது