பக்கம்:தாய் மண்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

அந்திப் பூவையின் தடம் ஒற்றி நடந்த தமிழரசி தன் இருப்பிடத்தை அடைந்தாள். வீடு திறந்த மேனியாகக் கிடந்ததைக் கண்டாள். சுற்றுமுற்றும் ஒரு கண்ணுேட்டம் செலுத்தி முடித்தாள் படுக்கை விரிப்பில் அமர்ந்தாள். எதிர்வசத்தில் அவள் மலர் விழிகள் மொய்த்தவேந்தன. “குன்று தோருடும் குழகன்’ இன்னமும் அருட் சிரிப்பு மாருமல் காட்சி தந்தான்.

“தெய்வ பக்திக்கு அளிக்கப்பட்ட காணிக்கை நாட்டும் பக்திக்குப் போய்ச் சார்ந்தது. கடமைக்கு ஆற்றிய கடமை!...”

ஆத்ம நிவேதனம்

பதது

காலம் ஆகிய குழந்தை கடிகாரத்தின் முட்களோடும் நான் காட்டியின் இதழ்களோடும் விளையாடிக் கொண் டிருந்தது. -

தாய் மண்ணின் வீரன் மோகன்தாஸைச் சந்தித்த அந்தக் கணம் முதல், தமிழரசி புதிய துடிப்பும் புதிய பார் வையும் புதிய வல்லமையும் பூண்டிருப்பதாகக் கருதி ள்ை. நாட்டிற்காகச் செய்யப்பட்ட தியாகத்திற்கு ஒரு வழிபாடு போல அவள் அன்று அவ்வீரனுக்கு மாலைபோட்டு வணக்கம் தெரிவித்த அச்செயலை இப்போது நினைத்தாலும் வியப்பாகவே தோன்றியது. உணர்ச்சிகளை நாம் ஆள வேண்டுமே யொழிய, நம்மை உணர்ச்சிகள் ஆளவிடக் கூடாது!’ என்பாள் அவள். என்றாலும், அச்சம்பவம் அவளேயும் மிஞ்சியதாகவே அமைந்துவிட்டது. அச்சம்ப வத்தை அவள் வாழ்த்தவே செய்தாள். உலகத்திலே மனிதர்கள் இதயத்திற்குத் திரைபோட்டு மூடிவிட்டு, எதற் கெடுத்தாலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள் இப்போது. தா. ம. 6 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/89&oldid=664162" இலிருந்து மீள்விக்கப்பட்டது