பக்கம்:தாய் மண்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள்தான் சட்டம் !


ஒன்று

புனிதம் தழைத்த ஆனந்தமான இளங்கால வேளை.

தமிழரசி நீராடிஞள்; நீறு தரித்தாள். தமிழ்த் தெய்வத்துக்கு நல்ல விளக்கு ஏற்றி வைத்தாள்: மலர்ச்சரம் சூட்டினுள். ஊதுவத்தி மணம் கமழ்ந்தது.

பிரார்த்தனே நடந்தது; முடிந்தது. மனம் ஆனந்தக் கடலாடியது. அவள் விழி மலர்ந்தாள்!...... கொண்டையில் செருகப்பட்டிருந்த கதம்ப மணம், அவளது எடுப்பான நீண்ட சிவந்த நாசிகளுக்கு ஆரோக்கிய மான வாசனையை அர்ப்பணம் செய்து கொண்டிருந்தது. அவளது அடி மனத்தில் இனம் புரியாத மகிழ்வு அலை அலையாக வீசி விரிந்தது. அலைகளின் முனைகளிலே, எண்ணங்கள் காலத்தின் மும்முனைகளைத் தொட்டுப் பார்த்துக் குமிழ் பறித்து விளையாடின. அவள் இதழ் பிரித்து, இதழ் இணைத்தாள்; அற்புதமான நளினம் பூண்ட மூரல் சிந்தியது. ஓடி வந்த நெடுமூச்சு வந்த சுவடு காட்டாமல் பறித்தது:

இடது கை மணிக்கட்டு அவள் பார்வையில் தென்பட்டது தான் தாமதம்; இருந்திருந்தாற்போல, அவளுக்குப் பதற்றம் மூண்டது. மணி எட்டரை ஆபிட்டுதே! பலகாரம் சாப்பிட்டுட்டுப் புறப்பட வேண்டியதுதான். எண்ணி எண்ணிப் பார்த்தாலும் மணி ஒன்பதுக்குக் கிட்டே நெருங் கிடாதா? அப்பத்தான் ஸ்கூலுக்குப் போய்ச் சேருறதுக்கும் அங்கே காலிங்பெல் அடிக்கிறதுக்கும் சரியாயிருக்கும்’ என்று எண்ணங்களைத் தொடுத்து, அவற்றுக்கு அனுசரணையாகக் காலத்தின் திட்டத்தையும் செம்மைப்படுத்திக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/9&oldid=664163" இலிருந்து மீள்விக்கப்பட்டது