பக்கம்:தாய் மண்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

சிரிப்பில்தான் போலிமுறை கையாளப்படுகிறதென்றால், அழுகையிலும் கூட செயற்கை ஒட்டிவிட்டது! பொய்யும் போலியும்தான் இப்போது உலகமாக மாறிவிட்டது!... இப்படிப்பட்ட உலகத்திலே, நான் என்னுடைய பரிசுத்த மான அன்பின் நன்றியுணர்வோடு, மோகன்தாசுக்குச் செலுத்தவேண்டிய க ர னி க் ைக ைய ச் செலுத்தி விட்டேன். வீரத்துக்கு வணக்கம் தெரிவித்துக் கும்பிட் டேன்; வீரத்துக்கு வாழ்த்துப் பாடி மாலை சூட்டி னேன். என்னுடைய இயல்பான கடமையுணர்வின் ஒரு பகுதி நிறைந்துவிட்டது: என்னுடைய மனிதப் பண்பின் ஒரு பகுதி நிறைந்துவிட்டது. அப்படியென்றால், இன்னும் மறுபகுதி குறையிருக்கின்றதா?... அப்படியென்றால், அந்த மறுபகுதி...?-சிந்தனையில் தொக்கி நின்ற கேள்விக்குறி யுடன் மூக்கின் நுனியில் விரலை வைத்தவாறு ஆழ்ந்த யோசனையில் லயித்துவிட்டாள் தமிழரசி, இனம் புரியாத ஒர் உணர்வு இனம் புரிந்த அன்பைப் பந்தப்படுத்தி அவளை மோகன்தாஸ் பக்கமாக இட்டுச் சென்று கொண்டிருப்பதை அவள் அறியலாளுள். இளமைத் துடிப்புக்கொண்ட மார் பகம் எம்பி எம்பித் தணிந்தது. சுவையுடன் தன்னுள் விரித்துக் கொண்டாள்.

தமிழரசியின் மனம் தமிழ்ச் சமுதாயப் பெண்களைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்திருந்தது. வானெலிப் பேச்சுக் குக் கட்டுரை தயாரிக்க வேண்டுமல்லவா? கழிந்த இரண்டு மூன்று இரவுகளாக இதே நிலை தொடர்ந்தது. தமிழ்ச் சமுதாயப் பெண்களின் வரிசையில் தனக்குரிய இடம் என்ன, தான் ஆற்ற வேண்டிய கடமை என்ன என்ற இரு பெரும் விளுக்கள் அவள் முன்னே மலையாக உயர்ந்து தோன்றின. கேள்விகளுக்குப் பதில் கொடுக்க விரும்பிய அவள் தன்னைத் தானே ஆராய்ந்தாள். ஏமாற்றமும் பெரு மூச்சும்தான் மிஞ்சின. நான் இன்னும் வாழத்தொடங்க வில்லை. ஆம்: நான் வாழத்தொடங்க வேண்டும். வாழ வேண்டும். தமிழ்ச் சமுதாயப் பெண்கள் வரிசையில் ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/90&oldid=664164" இலிருந்து மீள்விக்கப்பட்டது