பக்கம்:தாய் மண்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

இடம் பெற்றுத் திகழும் வண்ணம், வண்ணம் பெற்று வாழ வேண்டும்!” என்ற திடசங்கற்பத்தின் அடித்தளத்தில் அவள் இராப்பொழுதுகளைக் கழித்தாள். பொழுது விடிய விடிய, அவளது நெஞ்சும் வைரம் பாய்ந்து திகழ்ந்தது. அதே போல, மோகன்தாஸைப்பற்றிய நினைப்புக்களிலும் புதிய தென்பு ஊடாடித் திகழ்ந்தது.

அன்று சாயங்காலம் சந்தித்ததைத் தொடர்ந்து, மீண்டும் அடுத்த நாள் காலையில் தமிழரசி இறங்கிச் சென்று மோகன்தாசைச் சந்தித்தாள். “நாட்டின் மானத்தை-பெரு மையை-பெயரைக் காத்து நின்ற வீரத்தைத் தேடிச் செல் கிறேன் நான்’ என்ற பெருமிதத்துடன் அவள் நடந்தாள். நடைபாதையில் அவன் காணப்படவில்லை. ரிக்ஷா மட்டும் இருந்தது. அருகில் பார்த்தாள். சீதை அவளைக் கை தட்டிக் கூப்பிட்டாள். அவ்வீட்டை நாடி நடந்தாள். அங்குதான் அவர்களுக்கு வாசமாம். தேசீயவாதி ஒருவர் மோகன்தாஸின் குடும்பத்துக்குத் தம் வீட்டைக் கொடுத்து விட்டு, அவர் தம்முடைய வேறொரு வீட்டுக்குப் போய் விட்டாராம். -

தமிழரசியைக் கண்டதும் மோகன்தாஸ், “வாங்கம்மா’’ என்று வரவேற்றான், இளமீசை மேலேற, உந்திக்கமலம் வெளியேற்றிய தூய மலர்ச் சிரிப்பு மேலேறியது. “உட் காருங்கம்மா!’ -

சித்தடக்கமான மனே. முன்கூடத்தில்தான் மோகன் தாஸ் வாசம் செய்தான். புத்தக அலமாரி நிறைந்திருந்தது. பழைய இராணுவ உடுப்புகள் முனையில் தொங்கின.

“என் கையால் போட்ட காபி இது. நன்றாகவே இருக் கும். இதை நீங்கள் அருந்தில்ை, அதில் என் மனம் பெரிதும் மகிழ்ச்சி பெறும்’ என்று சொல்லி, காபியை லோட்டா வில் ஊற்றிக் கொடுத்தாள்.

“நீங்க?...’

“நான் வீட்டுக்குப் போனதும் சாப்பிடுவேன்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/91&oldid=664165" இலிருந்து மீள்விக்கப்பட்டது