பக்கம்:தாய் மண்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மோகன்தாஸ் அழகாகச் சிரித்தான். கன்னங்கள் ரோஜா நிறத்தில் குழி பறித்தன. காபியை அனுபவித்துக் குடித்தான். ‘மிகுந்த நன்றிங்க!’ அவன் கைவிரல்கள் ஊன்றுகோல்களைப் பாசத்துடன் வருடின.

தமிழரசி பிளாஸ்கின் மூடியைத் திருகினுள். ‘உங்க அன்பு எனக்கு ரொம்பவும் ஆறுதலாயிருக்கு துங்க!”

தமிழரசி அவனிடமிருந்து பிரிந்து சென்றாள். அவனைப் பார்க்கப் போகும்போது சரி, அவனைப் பார்த்துத் திரும்பும் போது சரி, பலர் பதவிதமாகப் பார்த்த வேடிக்கைகளையும் அவள் கவனித்தாள். உலகத்துக்காக நான் அல்ல!’ என்ற தன்னிறைவுப் போக்கு அவளுக்கு அமைதி ஊட்டியது.

மறுநாள் மாலையில் அவனும் அவளும் உரையாடிக்கொண் டிருந்தார்கள். போர் அரங்கத்தில் தாய்த் திருநாட்டுக்காகத் தான் ஆற்றிய கடமையின் பங்கைப்பற்றி விவரித்தான். அவளுக்கு மேனி நடுங்கியது. ‘நான் கொடுத்து வைக்காத வன். எனக்கு இந்தக் கதி ஏற்பட்டிராவிட்டால், இந்நேரம், என் எதிரிகளில் இன்னும் பலரை ஆகாயத்தில் தூக்கி எறிந்து பந்து விளையாடியிருப்பேன்!’

ஆற்றாமையின் கண்ணிர் சிதறியது. கண்ணிர்ச் சிதறல்கள் அவனது வேஷ்டியின் முனைகளை வருடிவிட்டன.

“உங்கள் பிறவிக்கு ஒரு நல்ல புண்ணியம் கிடைத்து விட்டது, மிஸ்டர் மோகன்தாஸ்’ என்றாள் அவள். அவனைப் பெயரிட்டு அழைத்தது. இதுவே முதல் தடவை.

அவன் பெருமூச்சை வெளியே அனுமதித்தவகை முதுகை நிமிர்த்திக் கொண்டான். குறிச்சி கிறிச் சிட்டது. நீங்க கொடுத்தனுப்பின மலரிலே உங்க கட்டுரை நேர்த்தியாக இருந்திச்சு. தூய்மைக்கு ஒரு தத்துவம்’ என்கிற தலைப்பே நூதனமாக இருந்திச்சு. போரும் காதலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் மாதிரி என்பதாகச் சொல்லாதவங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/92&oldid=664166" இலிருந்து மீள்விக்கப்பட்டது