பக்கம்:தாய் மண்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

பாக்கியில்லை. அப்படிபட்ட பொதுமொழியிலே எனக்குப் போரும் இருந்திச்சு; காதலும் இருந்திச்சு!...” என்று சொல்லிவிட்டு அவளை நோக்கினன்.

“ஆமாம், காதல் இருந்திச்சு இலக்கியத்திலே!...” அவள் பாவ பூர்வமாகச் சிரித்தாள். “'உங்களைப் போலவே எனக்கும் சூடிக் கொடுத்த தாச்சியார் என்றால் மனசுக்கு ஒரு பிரியம். தேவர் குலம் சார்ந்த ஆழிமழைக் கண்ணனே ஒரு மானுடப் பெண் உள்ளத்தின் தூய்மையால் நேசித்து, அன்பால் பூசித்து, தவ வலிமையால் வென்ற அந்த ஆன்ம நேயத்தைப் பற்றிப் புதிய கண்ணுேட்டத்திலே நீங்க எழுதியிருக்கீங்க!”

அவன் பாராட்டிய விதம் அவளுடைய எழுத்தார்வத் துக்குத் துரண்டுதலாக அமைந்தது. நன்றி நவின்றாள்.

பல நிமிஷங்களின் இடையருத சிந்தனை உழைப்பு அவளுக்குரிய வானொலிப் பேச்சை உருவாக்கிக் கொடுத்தது.

தமிழரசி அன்றைக்குப் பள்ளிக்கூடம் செல்லும்போது கையுடன் மேற்படி கட்டுரையை எடுத்துச் சென்றாள். பகலில் கிடைத்த அவகாசப் பொழுதைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுரையைத் தபாலில் சேர்த்தாள். சுமை சொல்லிக் கொண்டு ஏறுகிறது. அது இறங்கும்போது, சொல்லிக் கொள்ளுவது கிடையாது. ஒரு கடமை முடிந்ததில் அவளுக்கு நிரம்பவும் நிம்மதிதான்!

மணி பதினென்று பதினைந்து. இனிமேல் அரைமணி நேரத்துக்கு அவளுக்கு ஒய்வுதான்.

ஆசிரியைகளின் கூடத்தை அவள் அடைந்தாள். அங்கே ஜலஜாவும் சாவித்திரியும் எதிரெதிர் அமைப்பாகச் சாய்ந் திருந்தார்கள். அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தபோது அவளுக்கு அது ஒர் அதிசயச் சந்திப்பாகவே தோன்றியது. சாவித்திரியின்மீது அவளுக்கு இருந்து வந்த அனுதாபமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/93&oldid=664167" இலிருந்து மீள்விக்கப்பட்டது