பக்கம்:தாய் மண்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

நல்லெண்ணமும் ஜலஜா பேரில் உண்டாவது இல்லை: உண்டானதும் இல்லை! சாவித்திரி நல்லவள். அவள் கற்பையும் பெண்மையையும் மதிப்பவள். பாவம், ஜலஜா!...”

தன்னைக் கண்டு புன்முறுவல் பூத்த சாவித்திரியுடன் ஒரு நிமிஷம் பேசிளுள் தமிழரசி. ஆனால், ஜலஜாவைக் கண்டதும் அவளுக்கு அருவருப்பு மூண்டது. இந்த ரகசியம் ஜலஜா வுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், ஏனே அவள் அங்கிருந்து கழன்று நழுவினள். மின்னல் சேலை மின்மை லிருக்காது. அவள் நடந்தாலே ஒர் ஒயில்தான்! சே!...”

இப்போது சாவித்திரியும் தமிழரசியும் மாத்திரம் இருந் தனர். சாவித்திரி சுற்றுமுற்றும் பார்த்தபின், தமிழரசியின் சார்பாக நெருங்கினுள். தமிழரசியின் நெற்றிக் குங்குமத் தையே குறியாகப் பார்த்த சாவித்திரி, தன் நெற்றியை நடுங்கும் விரல்களால் தடவிக் கொண்டாள். ‘டீச்சர்!” என்று அழைத்தாள்.

தமிழரசி புரிந்து கொண்டாள். அன்றைக்கு மெரீன. சந்திப்பில் அவள் தன்னைப்பற்றிப் பேசிய பேச்சுக்குத் தொடர்பாக எதையோ தன்னைக் கேட்கப் போகிருள் அல்லது ஏதோ தன்னிடம் சொல்லப் போகிருள் என்பதுதான் விஷயம். -

அதற்குள் காலடி அரவம், அரவமாக நெளிந்தது.

ஜலஜா திரும்பியிருந்தாள். கையில் பிரித்திருந்த பத்திரிகை இருந்தது. அவள் தமிழரசியை விளித்தாள் :

“டீச்சர், டமிலரசி’ ஹார்ட்டி கங்க்ராசுலேஷன்ஸ்... நம்மகிட்டகூடச் சொல்லிக் கொள்ளாமல் நீங்க மாலை போட்டுட்டீங்களே! எங்களுக்கெல்லாம் டின்னர் எதுவும் வைக்க வேணும் அட்வீஸ்ட் மரியாதைக் கோசரமானும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதோ? நாங்களெல்லாம் ஒரு பட்டாளமாய்ச் சேர்ந்து வந்து உங்க விழாவை ராணுவ மரியாதையோடு ரொம்பவும் விமரிசையாய் நடத்தி வச்சிருப்போமே!...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/94&oldid=664168" இலிருந்து மீள்விக்கப்பட்டது