பக்கம்:தாய் மண்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

கை வளைகள் குலுங்குவதை நினைவூட்டிச் சிரித்தவாறு பேசி, அந்தப் பேச்சுக்கு உடனடியாகவே நிதர்சன நிரூபணம் செய்பவளை ஒப்ப, கையிலிருந்த ஒரு தமிழ்ப் பத்திரிகையை எடுத்துக் காட்டினுள் ஜலஜா.

ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தாள் தமிழரசி. ஜலஜாவின் கேலிப் பேச்சு தன் உள்ளத்துத் தன்மான உணர்ச்சியைக் கோல்கொண்டு குத்திப் புண்ணுக்கு வது போலிருந்தது. நெஞ்சக் கொதிப்பு மிகுந்தது. அவள் அடக்கிக் கொண்டாள். ஜலஜா பிரித்துக் காண்பித்த இடத்தில் கண் பதித்தாள்.

அன்றாெரு நாள், தாய்நாட்டு வீரன் மோகன்தாசுக்கு மண்ணில் மார்பு பதித்து வணக்கம் தெரிவித்த காட்சியும், அவனுடைய வீரத்துக்கு அஞ்சலி செலுத்தி மாலை போட்ட காட்சியும் படம் எடுக்கப்பட்டுப் பத்திரிகையில் வெளியாகி யிருந்தன. செய்திகளும் அடிப்புறம் அச்சாகியிருந்தன.

உணர்ச்சி பூர்வமான உள்ளத்தின் துய்மையான அஞ்சலிக் கடன், இந்தப் பெண் பேயின் வக்கிரப் பார்வையில் எவ்வளவு கோணலாகப் பட்டிருக்கிறது?...

ஜலஜாவின் நையாண்டி மொழிகள் தமிழரசியின் உள்ளத்தின் உள்ளத்தில் வெஞ்சினம் ஊட்டின. குமாரி ஜலஜாதேவி! நாம் இருப்பது பள்ளிக்கூடம். நாகரிகமாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய சொந்த விஷயங் களைப் பற்றி வியாக்கியானம் செய்ய நீங்கள் யார்?... நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். மற்றவர்களுக்கும் தெரியும். உங்கள் இதயம் சூன்யம். அதுபோலவே, உங்கள் உணர்ச்சி களும் சூன்யமாகிவிட்டன. அதனுல்தான், என்னுடைய அந்தரங்க சுத்தியான காரியங்கள், கடமைகள் உங்களுக்குக் கேலியாகத் தோன்றுகின்றன!

‘நாம் பிறந்த நாட்டுக்காகத் தம்மையே தியாகம் செய்து கொள்ளத் துணிந்து, தம் இரு கால்களையும் இழந்து வந்தி ருக்கும் ஒரு வீரருக்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்த செயலே இவ்வளவு கேலிக்குரியதாகப் பேசத் துணிந்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/95&oldid=664169" இலிருந்து மீள்விக்கப்பட்டது