பக்கம்:தாய் மண்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

கிறீர்களே?- உங்களுக்கு வெட்கமாக இல்லையா?... இத்தனை சிறு வயதில் நான் என் மனத்திற்குச் சேர்த்து வைத்திருக்கக் கூடிய வல்லமை என்றென்றும் என்னைக் காப்பாற்றும். நாளேயே அந்த வீரத் தியாகியை மணம் புரிந்து கொள்ளவும் நான் துணிவேன். வீரத்தை மதிக்கும் வீரம் எனக்கு உண்டு. ஆன்ம நேயத்தை ஒரு தவமாகவும் ஆத்ம நிவேதனத்தை ஒரு சத்தியமாகவும் வழிபட்டுச் சொல்லும் பேச்சு இது மீண்டும், ஞாபகப்படுத்துகிறேன். தமிழரசி நெருப்பு:மறந்துவிடாதீர்கள், ‘தித்யகுமாரி!...”*

அவள் பேசி முடித்ததும், கலகலப்பான நகைப்புச் சத்தம் நாற்புதமும் படர்ந்தது. கூடுதலாக இன்னும் சிலர், கூட்டம் சேர்த்திருக்கக் கண்டாள். மாணவிகளும் பலர் கூடி யிருந்தனர்.

‘கிளியோபாட்ரா'வுக்கு நல்ல மூக்குடை ஷேம்!...” குரல்கள் சில வீரிட்டன. ஜலஜாவுக்கு மூக்கு மேலும் சிவந்து தொலைத்தது.கண்கள் அசல் கொவ்வைப் பழங்களாக மாறின. டேரண்ட்ஸ் அட்ரஸ் தெரியாத அளுதைக் குட்டிக்கு வாய்க் கொழுப்பைப் பாருங்க!...” என்று கொட்டிவிட்டு, தன் பேச்சுச் சத்தம் தேய்வதற்குள்ளாக, அவள் அங்கிருந்து நழுவிச் சென்றாள்.

ஜலஜாவின் ஏச்சைக் கேட்டதும் தமிழரசியின் மேனி அல்லாடியது. கண்கள் கசிந்தன. கைக்குட்டையை இதழ் களுக்குள் பொருத்தினள். தலையைத் தாழ்த்திக் கொண் உாள். ‘தெய்வம் ரொம்பவும் பார பட்சம் உள்ளது!’ என்று வெளிப்படையாகச் சொல்லி விம்மிள்ை. .

தமிழரசியை நெருங்கினுள் சாவித்திரி. நட்புக்குத் துனே ஆனது நட்பு... ஆனால், காலம் அவர்களைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்த்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/96&oldid=664170" இலிருந்து மீள்விக்கப்பட்டது