பக்கம்:தாய் மண்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதிக்குத்தான் விளையாடத் தெரியும்!

பதினென்று வாழ்க்கையின் கதை வெறும் அழுகையிலும், வெறும் சிரிப்பிலும் மட்டிலுமே அடங்கி ஒடுங்கி விடுகிறதா, என்ன?

ஊஹாம்!... அவை இரண்டுக்கும் அப்பால் - அவை இரண்டுக்கும் பிடிபடாத அளவில் - பிடிகொடுக்காத அளவிலே, வாழ்க்கை விளையாடுகிறது.

இவ்விளையாட்டுக்கு மானுடப் பிறப்பு ஒரு சோதனைச் . *frru. -

வாழ்க்கையோடு ஆண் விளையாடுகிருன்; பெண்ணும் விளையாடுகிருள்.

அதேபோல, ஆளுேடும் வாழ்க்கை விளையாடுகிறது: பெண்ணுேடும் விளையாடுகிறது.

இத்தகைய விசித்திரமான ஆட்டத்தின் தீர்ப்பை வழங்க - ஆட்டத்திற்குத் தீர்ப்பை வழங்க வெறும் அழுகை

யாலும், வெறும் சிரிப்பாலும் முடிந்துவிடுமா, என்ன?

ஊஹ7ம்! ... அவை இரண்டுக்கும் அப்பால் - அவை இரண்டுக்கும் பிடிபடாத அளவிலே - பிடி கொடுக்காத அளவிலே, சூத்திரதாரியாக விதியும் வினையும் தெய்வமும் போட்டி போடுகின்றன!

ஆம்; இந்தக் கட்டத்தில்தான், சிருஷ்டி, புதிராக ஆகிறது!

முடிவு...? பெண் ஆரம்பித்து வைக்கும் வாழ்வு என்னும் பொய்க் கதையை மண் உண்மையாகவே முடித்து வைக்கிறது!

பெரும்பாலும் அழுகையைப் பிரிந்து விலகியே வளர்ந்து விட்டவள் தமிழரசி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/97&oldid=664171" இலிருந்து மீள்விக்கப்பட்டது