பக்கம்:தாய் மண்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

ஆளுல், சிரிப்பின் துணையை மிகவும் நுணுக்கலான ஒட்டுறவுடன் ஆண்டு அனுபவித்து உணர்ந்தவள் அவள்.

கஸ்தூரி அன்னை அளுதை இல்லத் தலைவியின் வளர்ப்பு முறைச் சிறப்பு இது.

ஆஞல், தமிழரசிக்கு அந்த அழுகையும் அந்தச் சிரிப்பும் இப்போது அர்த்தமற்றதாகவே தோன்றின: அர்த்தமற்ற: வெறுமைகளாகவே - சூன்யங்களாகவே தோ ன் றி ன. தன்னைப்பற்றி எண்ண எண்ண, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. பிறவிப்பயன் என்றும், பிறவிக்கடன் என்றும் மானுடப் பிறப்பின் எல்லை நிலைகளைப் பற்றிக் கேட்டது - சிந்தித்தது - சொல்லியது எல்லாமே மாயப் பொய் என்ப தாகவே அவள் கருதினுள். “என்னைப் போன்ற அனுதைக்கு எதுவுமே உண்மையல்ல; எதற்குமே பொருள் இல்லை. எல்லாவற்றிலும் சோதனைதான்; எல்லாமே போராட்டம் தான்! நாதியற்ற அனுதை யென்றால், உலகுக்கு ஓர் அலட்சியம், ஒர் ஏளனம், ஒரு நையாண்டி!”

தோன்றிய எண்ணங்களே, எண்ணச் சுழிப்புக்களே அை அலேயாக - அலைச் சுழல்களாக அவள் மன ஆழியில் குமுறிக் கொந்தளித்தன. கடல் அலை அடங்கி விடும். ஆனால், மன அலே அப்படியா? அல்லவே!...

கடந்த சில நாழிகைப் பொழுதாக அவள் மனம் அடைந்து வந்த சலனம் இப்போது உச்சகட்டத்தை எட்டிப் பிடித்தது. “அனதை’ என்ற சொல் ஒன்றே அவளுடைய மனத் தெளிவுக்கும் மனப்பலத்துக்கும் வாய்த்த பயங்கரச் சோதனையாகி அவள் முன் பயம் காட்டியது; விசுவரூபம் எடுத்துப் பயம் காட்டியது. -

“நான் அனதை’ என்ற உண்மையை அவள் நித்த நித்தம் நினைவூட்டிக் கொள்ள ஏதுவாக இருந்தது. அவளது கானே நேரத்துக் கடவுள் பிரார்த்தண்யின் தொடக்கத்தில், தான் அைைத’ என்ற இட்டு நிரப்ப முடியாத ஆருத் துயரம் அவளே ஆட்டிப் படைக்கும். பிரார்த்தனையின் இறுதியிலோ, *நான் அளுதையல்ல; மதர் சொல்கிற மாதிரி எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/98&oldid=664172" இலிருந்து மீள்விக்கப்பட்டது