பக்கம்:தாய் மண்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

தெய்வம்தான் அம்மையப்பனுக இருக்கிருனே! நான் அகுதை, அல்லவே அல்ல!” என்ற மாபெரும் நம்பிக்கை, அவளது மனக்குறை முழுவதையும் கணத்தில் மாயமாக மறைத்து விடும். அவள் அடையும் ஆறுதலுக்குக் கங்குகரை யிருக்காது.

ஆனால், இந்தச் சில நாழிகைகளாக, நிலைமை அப்படி. அமையவில்லை. சலனம் எய்திய மனம், கங்குகரை உடைத்துக்கொண்டு விம்மியது. கண்ணிர் வெள்ளம் பெரு கியது. “பேரண்ட்ஸ் அட்ரஸ் தெரியாத அளுதைக் குட்டிக்கு வாய்க்கொழுப்பைப் பாருங்க!’ என்று நிர் தாட்சிண்யமான வறட்டு இருதயத்தோடு அவளை ஏசிய ஜலஜாவின் சொல்லம்பு கள் அவளைக் கூறுபோட்டன. உலகிலே தன்னைப் போன்ற ஆயிரமாயிரம் அைைதகள் உயிரோடு இருக்கையில், அவ் அண்மை நிலையை மறந்துவிட்டு, தன்னைப் பற்றி மாத்திரம் அவள் நினைத்து நினைத்து நெக்குருகினள். அழுகை என்றால் சிரிப்பும் அதன் பின்னே தொடராமல் இருக்காது என்ற அனுபவ உண்மையை அவள் ஏற்கவில்லை.

“என் பிறப்பையே ஒரு துர்க்குறியாக எண்ணித்தான் என்னைப் பெற்ற ஜன்மங்கள் இருவரும் என் முகதரிசனத்தைக் காணக்கூட மனம் துணியாமல், இப்படி என்னை அைைத யாக்கிவிட்டு ஒடி ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். அது தான் உண்மையாக இருக்க முடியும் இல்லையென்றால் அவர் கள் இருவரில் ஒருவர் மனம்கூடவா இளகாமல் இருந்: திருக்கும்? அதற்குக் காரணம், குறுக்கு வழிப் பிறப்பாகத். தான் என்னுடைய ஜன்மம் இருந்திருக்க வேண்டும்! என் பெற்றேரின் rணநேரச் சலனத்தின் வினையையும் விதியை யும் நான் அனுபவித்துத் தீரவேண்டிய துர்ப்பாக்கியமான தலையெழுத்தை விதியும் வினையும் தெய்வமும் எனக்கு ஆன. யென இட்டுவிட்டன!... என் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட இந்த ஊனத்தை - சாசுவதமான இந்த ஊனத்தை நான் அனு: பவித்துத்தான் தீர வேண்டுமா?. அப்படியென்றால், தினம் தினம் நான் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியவள்தான?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/99&oldid=664173" இலிருந்து மீள்விக்கப்பட்டது