பக்கம்:தாழம்பூ.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 87

வார்த்தை நெகிழ்வைக் கொடுத்தது. அவளை உட்காரும்படி சைகை செய்தார். அவள் உட்கார்ந்ததும், அவளைப் போல் தானும் உட்காரலாமா என்று யோசித்த இளங்கோ, சிறிது நின்றுவிட்டு பிறகு உட்கார்ந்தான். ருக்குமணி ஜம்மென்று உட்காரப்போன மகனை காதைப் பிடித்துத் திருகி தன் பக்கத்தில் நிறுத்திக் கொண்டாள். டெப்டி கமிஷனர், ஒரு டெலிபோன் பேச்சை முடித்து விட்டு, அவர்களைப் பார்ப்பதும், மற்றொரு டெலிபோன் அறுக்க வருவதுமாக இருந்தது. ஒன்றில் “எஸ். ஸார். எஸ் வார்” என்று குழைந்த அவர், இன்னொரு போனில், “என்னா மேன் செய்யறே? கொஞ்சமாவது மூளையிருக்கா?” என்று எரிந்தார். இப்படி ஒரே சமயத்தில் மெழுகுவர்த்தி மாதிரி குழைவதும், எரிவதுமாக இருந்த அவரைப் பார்த்த ருக்குமணி ரஜினிகாந்தை விட, இவர் பெரியவராக இருக்கலாமோ என்று சந்தேகப்படுவதுபோல் பார்த்தாள்.

டெலிபோன் மணிகளும், மைக் பிளிறலும் சிறிது நின்ற போது, பாமா குழந்தைத்தனமாகக் கேட்டாள் :

“அங்கிள், என்னை ஞாபகம் இருக்குதா? பத்து வயகல உங்களைப் பார்த்தது... பட், உங்க அப்போதைய உருவம் இன்னமும் ஞாபகம் இருக்குது. டாடி. அதான் உங்க பிரண்ட் மிஸ்டர். ரமணன், சதா உங்களைப் பத்தியே போரடிப்பார். பரீட்சையில் உங்க பேப்பரைப் பார்த்து அவர் காப்பியடிச்சாராம், இதனால் உங்களுக்கு பெரிய சைபரும், அவருக்கு சின்ன சைபரும் கிடைச்சுதாம்.”

பாமாவின் சிரிப்போடு சேர்ந்து சிரிக்கப் போனார் டெப்டி இதற்குள் ஒரு மேலிடமிரட்டல் டெலிபோன். கீழிட பிரார்த்தனை டெலிபோன். அதற்குள் பி.ஏ. கொண்டு வந்து கொடுத்த ஒரு பவர் புரோக்களின் விசிட்டிங் கார்ட். அவரை உடனே பார்க்காவிட்டால் ஆவடி ஆயுத போலீசுக்குத்தான் போக வேண்டும். ஆகையால் அவசர அவசரமாய்க் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/101&oldid=636540" இலிருந்து மீள்விக்கப்பட்டது