பக்கம்:தாழம்பூ.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தாழம்பூ

‘சொல்ல வேண்டியதை ஒரு நிமிசத்துல கருக்கமா சொல்லும்மா.”

பாமா கருக்கமாக எப்படிச் சொல்வது என்பதற்காக கால் நிமிடம் எடுத்துக் கொண்டாள். பிறகு நடந்த விவரத்தை ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.

டெப்டி கமிஷனர் அவளை இடைமறித்துக் கேட்டார்.

“இந்தப் பையனை கொலை செய்ததாய் கேஸ். ஒகே! பட், அப்படி நடக்கலே, சரிதானே? ஒங்க ஏரியா இன்ஸ்பெக்டரை போய்ப் பாரு. நான் மைக்கில பேசிடுறேன். சரோசாவையும் வார்னிங் கொடுத்து விட்டுடச் சொல்றேன். ஒன் பேரு என்னம்மா, ருக்குமணியா? குழந்தைய சரியா கவனிச்சுக்கத் தெரிஞ்சுக்கோ. பாமா! ஒரு நாளைக்கு சாவகாசமாக வீட்டுக்கு வா. உங்க அப்பாவ அங்கே வந்து என்ன ‘டா’ போட்டு பேசலாமுன்னு சொல்லு. ஒகே!”

“தாங்க்யூ அங்கிள்” என்று சொல்லப்போன பாமா, அவர் இன்னொரு டெலிபோனில் பேசப் போவதைப் பார்த்துவிட்டு வாயில் அந்த வார்த்தையை சுமந்து கொண்டு நின்றாள். பிறகு அவர் ஒரு மாதிரி டெலிபோனில் பேச்சை இழுப்பதைப் பார்த்துவிட்டு, சத்தம் போட்டு ஒரு தாங்க்ஸை சொல்லிவிட்டு மற்றவர்களோடு வெளியேறினாள்.

சென்னைப் பெருநகர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உருண்டோடி வந்த இன்னொரு ஆட்டோ ரிக்ஷா, சரோசாவுக்கு அடி உதைகளை வாடகையாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் பழைய காவல் நிலையத்திற்குள் வந்தது. இங்கேயும் ஒரு போலீஸ்காரர் வந்து அந்த டிரைவரை திட்டக்கூடாது என்பதற்காக, ருக்குமணி வாசலிலேயே இறங்கிக் கொண்டாள். ஆனாலும், அம்மாம்பெரிய போலீஸ் அதிகாரியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/102&oldid=636541" இலிருந்து மீள்விக்கப்பட்டது