பக்கம்:தாழம்பூ.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 89

பார்த்ததால், அவளுக்கு, இந்தக் காவல் நிலையம், மகுடம் இல்லாத பிசாத்தாய் தோன்றியது.

பாமா, தயங்கித் தயங்கி பின்னால் நடந்த ருக்குமணியை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்தாள். பின்னால் மெல்ல நடந்த இளங்கோவை முதுகைப் பிடித்துத் தள்ளினாள். அந்த மூவரும், ஆறுமுகப் பயலும், மாடிமேல் குடிகொண்ட இன்ஸ்பெக்டர் அறைக்குள் வந்தார்கள். இப்போதும் அங்கே அதே கிரைம் இன்ஸ்பெக்டரும் இருந்தார். அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், இவர்களைப் பார்த்ததும் உடனடியாக வாயை மூடிக்கொண்டு, முறைத்தார். பாமா அதை பொருட்படுத்தாதது போல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, இளங்கோவையும் உட்கார வைத்துவிட்டுப்பேசினாள்:

“ஸார், என் பெயர் பாமா. டி.சி.கிட்டே போயிட்டு வாரோம்!”

“நாங்களெல்லாம் சின்னவங்க, பெரியவங்கக்கிட்ட போன பிறகு எங்ககிட்ட என்ன வேலை?”

இதற்குள், சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டுப் பேசினார்:

“ஒன்று மட்டும் நினைச்கக்கங்கம்மா. நீங்க டைரக்டர் ஜெனரல்கிட்ட போனாலும், கடைசியில அது நல்லதோ, கெட்டதோ அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர்கிட்ட, அல்லது ஒரு கான்ஸ்டபிள்கிட்டதான் வந்து விழும். இந்த இளங்கோ அந்த சரோசாகிட்ட முறை தவறி நடக்கப்போனார்னு அந்த டெப்டி கமிஷனர்கிட்ட நாங்க சொன்னோமுனா, அவரால மூச்சுவிடக்கூட முடியாது. நீங்கள் எங்களப் பார்த்துட்டு, அப்புறம் முடியாட்டால்தான் டெப்டி கமிஷனர்கிட்டே போயிருக்கணும்.”

பாமாவும், இளங்கோவும் கம்மாயிருந்தபோது, இன்ஸ்பெக்டர் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்த ருக்குமணியை கண்டுவிரலை ஆட்டிக் கூப்பிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/103&oldid=636542" இலிருந்து மீள்விக்கப்பட்டது