பக்கம்:தாழம்பூ.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 9]

இளங்கோவும், பாமாவும் ஒருவரையொருவர் பீதியோடு பார்த்துக் கொண்டபோது, இன்ஸ்பெக்டா இளங்கோவிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை தனது அனுபவ பின்னணியில் மீண்டும் விளக்கினார் :

“சாராய கோஷ்டிங்க கிட்ட இருக்கிறசெட்டுங்க,மோசமான செட்டுங்க. பொதுவா இவங்களுக்கும், மிருகங்களுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. ஒரு மிருகத்துக்கு, எப்படி தன்னால் தாக்கப்பட்டவன் ஞாபகம் இருக்காதோ, அப்படி இவங்களுக்கும் தங்களால் பாதிக்கப்பட்டவங்களப் பத்தி பின்னால நினைப்பே இருக்காது. பெரிய பெரிய பட்டாக்கத்திய வச்சு, எதிராளியை ஒரு வீச்சு வீசணும். அதுல கை விழுந்தாலும், கால் விழுந்தாலும் கவலையில்லை. அதோட சரி. இளங்கோ மேலே ஒரே ஒரு தடவைதான் பட்டாக்கத்திய வீசவாங்க. அதுல, இவருதப்பிச்சுட்டா அப்புறம் அவங்களும் கவலைப்பட மாட்டாங்க. இவரு தலை போயிட்டால் கொஞ்ச நாளைக்கு தலை மறவைா இருப்பாங்க. அப்புறம்தானா ரோட்டுக்கு வருவாங்க காரணம் ஒவ்வொரு சாராய கோஷ்டிக்கும் பின்னால்,ஒரு அரசியல்வாதி இருக்கான்.இவங்கள எதுவும் செய்ய முடியாது. பயப்படும்படியா பேசுறேன்னு நினைக்காதீங்க. நீங்க டெப்டி கமிஷனருக்கு வேண்டியவங்க என்பதால விலாவாரியா சொல்லிட்டேன். எதுக்கும் கலந்தாலோசித்து முடிவ சொல்லுங்க”

இளங்கோவின் முகத்தில் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு இறுக்கம். பாமா முகத்தில் பல்வேறு சுழிப்புகள். அவனை கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்த அறைக்கு வெளியே கூட்டி வந்தாள். பையனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்த ருக்குமணியும் பதறியடித்து நின்றாள்.

பாமா சிறிது யோசிப்பவள் போல் அங்குமிங்குமாய் கற்றினாள். ஒவ்வொரு கற்றும் அவளுக்கு தலைச்சுற்றலைத் தான் கொடுத்தது. குழம்பிப் போய் அவளும் உளறிப் பேசினாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/105&oldid=636544" இலிருந்து மீள்விக்கப்பட்டது