பக்கம்:தாழம்பூ.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 93

இருந்து அவளுக்கும் இளங்கோ சொல்வது சரிஎன்று பட்டது போல் தோன்றியது. இருந்தாலும் பாமா பதறிப்பதறிப் பேசினாள். “எனக்குத் தலையே வெடிச்சிடும் போல இருக்குது. இது நாயர் பிடிச்ச புலிவால் மாதிரி தோணுது. விடவும் முடியல, தொடவும் முடியல. இவருக்கு ஏதாவது.”

விம்மப்போன பாமா, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டாள். இளங்கோ அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, அவளையும், ருக்குமணியையும் கூட்டிக் கொண்டு உள்ளே போனாள். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உரையாடலுக்கு தடங்கல் ஏற்படுத்தியபடி முடிவை அறிவித்தான் :

“எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை சார். ஆனால், நியாயத்துக்குத்தான் எதுவும் நடந்துடக்கூடாது. தயவு செய்து சரோசாவை விடுதலை செய்திடுங்க சார்.”

மேஜையில் பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், அவனைப் பார்க்காமலேயே பேசினார் :

“ஆல் ரைட். ரைட்டர் கிட்ட போய் உங்க புகாரை வாபஸ் வாங்குறதாய் ஒரு மனு கொடுங்க. ஒன் பேரு என்னம்மா? ருக்குமணியோ, மக்குமணியோ. ஒன் பையன் கிடச்கட்டதாய் நீயும் எழுதிக் கொடு. இந்தாப்பா, இவங்கள ரைட்டர்கிட்ட கூட்டிட்டுப் போப்பா... ஓ.கே. மிஸ்டர் இளங்கோ! தாங்க்யூ மிஸ்-ஸா, மிஸ்ஸஸ்ஸா. விஷ்யூ. குட்லக் பாமா.”

“சரோசாவை எப்போ சார் விடுவீங்க?”

“போலீசுக்கு எந்தச் சமயத்தில் என்ன செய்யனும் என்று தெரியும். எங்க டுட்டிய நீங்க செய்ய வேண்டாம். இனிமேலாவது, குப்பத்து காரிங்ககிட்ட நாசூக்கா நடந்துக்கங்க. டி.சி.கிட்ட இன்னொரு தடவை பேசி, என்ன முடிவு எடுக்கனுமோ அதை எடுப்போம். போயிட்டு வாறிங்காள?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/107&oldid=636546" இலிருந்து மீள்விக்கப்பட்டது