பக்கம்:தாழம்பூ.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. தாழம்பூ

இன்ஸ்பெக்டர், அவர்கள் அங்கேயே தயங்கி நின்றபோதும், அவர்கள் அங்கே இல்லாததுபோல் அனுமானித்து, சப் இன்ஸ்பெக்டரிடம் பேசப் போனார். இதற்குள் அவர்களை ரைட்டரிடம் கூட்டிப் போகும் பொறுப்பை மேற்கொண்ட கரும்பு மாமூல் கான்ஸ்டபிள் பாமாவை கெஞ்சுவதைப் போலவும், இளங்கோவுக்கு அஞ்சுவது போலவும், ருக்குமணியை மிஞ்சுவது போலவும் ஒரே சமயத்தில் பல பார்வைகளை வீசிக் கொண்டு அவசரப்படுத்தினார். அவர்களும், அவர் பின்னால் போய் விட்டார்கள். உடனே, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து லேசாய் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்துகொண்ட சப். அதற்குரிய அர்த்தத்தை அவரிடமே விளக்கினார்.

“பயல் ஆறு மாதத்துக்கு துங்க மாட்டான் சார். டெப்டி கமிஷனர் கிட்டயிருந்து வந்தங்கிறதுல ஆரம்பத்துல தெனாவட்டா நின்னவனை அப்படியே கூனிக் குறுக வைச்சுட்டீங்களே; அவனை வாழப்பழமா கொழய வச்சு, எல்லாப் பக்கமும் ஊசியாலே குத்திட்டிங்களே. ஆனால், என்ன மாதிரி போலீஸ், கிராமப்புறத்துல இந்த மாதிரி டெக்னிக்கை பயன்படுத்துறது இல்ல சார். பேக்ரவுண்ட் உள்ளவன் முன்னால, பேக்ரவுண்ட் இல்லாதவனை எடுத்த எடுப்பிலேயே தேவடியா மகனே'ன்னு கேட்போம். அவனோட பெண்டு பிள்ளைகளையும் வாய்க்கு வந்தபடி திட்டுவோம். பேக்ரவுண்ட் உள்ளவன் பயந்துடுவான். சரி... விஷயத்துக்கு வருவோம். கதந்திர தினத்துக்கு பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யணுமே?”

“சுதந்திரத்துக்கும் நமக்கும் என்னப்பா சம்பந்தம்? எப்போ போலீகல சேர்ந்தோமோ அப்போமே, நம்ம சுதந்திரத்தையும், விட்டுட்டோம். அடுத்தவன் சுதந்திரத்தையும் அபகரிச்சுட்டோம். சரோசாவ. நீயே போய் கூட்டிக்கிட்டு வா.”

சப்-இன்ஸ்பெக்டர், தனக்குப் பதவி உயர்வு வந்தது போல் துள்ளி எழுந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/108&oldid=636547" இலிருந்து மீள்விக்கப்பட்டது