பக்கம்:தாழம்பூ.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தாழம்பூ

இதற்குள், அம்மைத் தழும்பன் அவனை ஆற்றுப்படுத்தினான்:

“என் பொறுப்புல விடுடா. நம்ம சரோவுக்கு, ரத்தக் காயத்த வாங்கிக் கொடுத்தவன், ரத்தத்துல மிதக்கணும். நானே அத என் கையால செய்யப் போறேன். டாய்! இளநியா குடிக்கற? உன் ரத்தத்த நான் குடிக்கிறன்ே பாரு. மவனே.”

சரோசா அவர்கள் கை ஆட்டிய திசை நோக்கிப் பார்த்தாள். இளங்கோ அவளைப் பார்த்துவிட்டு இளநீரால் முகத்தை மறைத்துக் கொண்டது போல் தோன்றியது. சரோசாவால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. போலீஸ் கொடுத்த உதையில் கழுத்து வலித்ததால் மீண்டும் சகாக்களைப் பார்த்தாள். எந்தவித கரணையும் இல்லாமல் தோஸ்துகளிடம் தன்னை ஒப்படைத்தவள் போல வழி நடந்தாள்.

சரோசா விடுதலையாகி ஒரு வாரம் ஓடிவிட்டது. இளங்கோ, அவளை இப்போது மறந்து விட்டான். அவள் விடுதலையானதைக் கேள்விப்பட்டு, பாமாவின் தந்தை மிஸ்டர். ரமணன்தான், துள்ளினார். அவருக்கு, அவள் விடுதலையாகி விட்டாள் என்பதை விட, புத்திசாலியான தனது மகளும், மக்குசாமியான கப்பையாவின் மகனும், தனது முதுகுக்குப் பின்னால் இப்படியொரு விடுதலையை வாங்கிக் கொடுத்துவிட்டார்களே என்ற கோபந்தான். ஒருவேளை இந்த இருவரும் அவரையே இந்திரன் சந்திரன் என்று துதிபாடியிருந்தால், அவரே முன்னால் நின்று சரோசாவை விடுவிக்கப்பாடுபட்டிருப்பார் என்றாலும், பாமா,தனது வருங்காலக் கணவன் மீது பட்டாக்கத்தி பாயக்கூடாது என்ற பயத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/112&oldid=636552" இலிருந்து மீள்விக்கப்பட்டது