பக்கம்:தாழம்பூ.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 10]

கல்லுமா வந்தால், அவங்களை சத்தம் போட்டு துரத்துறவன் நான்.

எனக்கு எதுக்குப்பா துப்பாக்கி?”

‘ஏதோ உன் தோஸ்து, சொல்றதச் சொல்லிட்டேன்.

அப்புறம் ஒன்னோட இஷ்டம்.”

“விவரமாத்தான் சொல்லேன் முனுசாமி.”

“வயக்கம்போல பட்டை யூடுறதுக்கு அங்கே போனேனா. சரோசாதான் ஊத்திக் கொடுத்தாள். அப்போ அவளோட தோஸ்துங்க உன்னை பட்டாக்கத்தியாலே ஒரு சொருகு சொருகப்போறதா பேகனாங்க. நீ வேலை பார்க்கிற ஆபீசு, பாமாவை ஏத்திட்டுப் போற பஸ்டாண்டு, நீங்க டூயட் பாடுற பீச் அல்லா இடத்துலேயும் ஒன்னவாச்பண்றாங்கோ. இன்னும் நாலு நாளைக்குள்ளே தீர்த்துக் கட்டப் போறதாய் சாராயம் குடிக்காமலே சபதம் போட்டாங்கோ.”

“இதுக்கு சரோசா என்ன சொன்னாள்?”

“ஏதோ சொன்னாள். அதுக்குள்ளே சாராயம் என்னோட தலைக்குள்ளே பூட்டு, கிக்காய் படுத்துட்டேன். சரோசா பேசறதை பார்க்க முடிஞ்சது; ஆனால் கேக்க முடியலே. இதுல்லாம் நேற்று நைட்லே நடந்த சமாசாரம்.”

“சரி. இந்தா. பத்து ரூபாய். ஒரு கிளாஸ் போட்டுக்கோ.”

“நானும் மனுசன்தான். இந்தவாட்டி உன்கிட்டே காக வாங்கறது. நானு உன்மேலே வச்சிருக்கிற பிரண்டுசிப்பை அசிங்கப்படுத்துறமாதிரி. ஜாக்கிரதையா போ. நானும் என் பங்குக்கு அப்பப்போ ஒட்டு கேக்கேன்.”

இளங்கோவிற்கு, அவனது புல்லட் வண்டி மாதிரி உடம்பெல்லாம் ஆடியது. முடிந்து போனதாய் நினைத்த ஒன்று, ஒரு முடிச்சோடு வந்திருப்பதை அறிந்ததும், அவன், மூளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/115&oldid=636555" இலிருந்து மீள்விக்கப்பட்டது