பக்கம்:தாழம்பூ.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தாழம்பூ

மரத்ததுபோல் நின்றான். மெல்ல மெல்ல இன்றோ நாளையோ, தான் தாக்கப்படலாம் என்ற எண்ணம் அச்சமாகி பீதியானது. அதே சமயம் நன்றி மறந்த ஒருத்தி இப்படிப்பட்ட ஒன்றில் ஈடுபட்டால் அதை சந்திக்க வேண்டும் என்ற நொந்துபோன வீராப்புடன் பைக்கை அழுத்தினான். கண்மண் தெரியாமல் ஒட்டினான். என்னதான் தனக்குள்ளே வீரம் பேசிக் கொண்டாலும், எதிரே தற்செயலாக அவனைப் பார்ப்பவர்கள் கூட அவனுக்கு எதிரிகள்போல் தோன்றியது. பாமா நிற்கும் இடத்திற்கு சரியாக முன்னால் நிற்கும் பைக்கை, சிறிது தூரம் தள்ளிப் போய் நிறுத்தினான். தோளில் ஒரு ஜோல்னாப் பையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, பாமா அவனைப் பாராதது போல் நின்றாள். பிறகு அவன் அருகே ஓடிவந்து கத்தினாள் :

“ஆமா, பைக்கை அங்கேயே நிறுத்தினால் என்ன? என்னைக் காக்க வச்சது மட்டுமில்லாமே எதுக்காக இப்படி ஒட வைக்கிறீங்க? காதல் இதுக்குள்ளே கசந்துட்டுதா? இளங்கோ ஒங்களத்தான். ஏன் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கரீங்க?”

இளங்கோ திரும்பிப் பார்த்தான். உறுமிக் கொண்டிருந்த பைக்கை ஆப் செய்து நிறுத்தி விட்டு, அவளையே பேச்சற்றுப் பார்த்தான். அவன் உடலெங்கும் வியர்வைத் துளிகள் வெள்ளமாகிக் கொண்டிருந்தன. அந்த சாலையும், அதன் வாகனங்களும், ஏதோ ஒரு மாய உலகில் போய்க் கொண்டிருப்பது போல தோன்றியது. தலை ஆங்காங்கே அரித்தது. எதிரிகள் நோட்டமிடுகிறார்களோ என்று அங்கேயும் இங்கேயும் பார்த்தபடி முனுசாமி சொன்னதை பாமாவிடம் ஒப்பித்தான்.

அவள் பயந்துவிட்டாள். அவன் பேசப்பேச, முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். அவனை யாருக்கும் பலி கொடுக்கப் போவதில்லை என்பது போல் இடுப்பில் வில் போல் வளைந்த அவன் கைக்குள் தனது கரத்தை சக்கரம் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/116&oldid=636556" இலிருந்து மீள்விக்கப்பட்டது