பக்கம்:தாழம்பூ.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 103

சேர்த்துக் கொண்டாள். அக்கம்பக்கத்தில் சிலர் குளு சிரிப்பாய் பார்ப்பதை அவளும் பார்த்தாள். ஆனால் பொருட்படுத்தவில்லை. அவள் தனக்காக அப்படி அல்லாடுவதில், அவனுக்கும் ககம் கிடைத்தது. அதே சமயம் “பாமா, பாமா, நீ இப்படி உன் அன்பை வெளிப்படுத்துவதற்காக ஆயிரம் பட்டாக்கத்திகள் என்மீது பாய்ந்தாலும் பரவாயில்லை” என்பதுபோல் கால நேர சூழல் தெரியாமல் மடத்தனமாகப் பேசப்படும் சினிமா டைலாக்கை பேசாமல் அவள், பேசட்டும் என்பது போல், அவளிடம் ஆறுதல் கண்டது போல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு வார்த்தைகளை மென்று விழுங்கிப் பேசினாள் :

“அந்த ரவுடிப் பசங்களுக்குத் தான் அறிவில்லை, அந்தக் குப்பத்து ரவுடிப் பொண்ணுக்கு வேண்டாம்? நன்றி கெட்ட நாய்.”

“நாம்தான் அவள் விடுதலைக்குக் காரணமுன்னு அவளுக்குத் தெரியுமோ, என்னமோ?

“நீங்க உங்க போலீஸ் பிரண்டு திருமலையப்பன்கிட்டே விசயத்தை சொல்லி, அவள்கிட்ட விளக்கமா சொல்லச் சொல்லி இருக்கலாமே.”

“அதுக்காகவே அவரைத் தேடி அலைந்தேன். பதினைந்து நாள் லீவுலே மதுரைக்குப் போய் இருக்காராம்.”

“அடக் கடவுளே! பேசாமல் போலீஸ்லே ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுப்போமா?”

“எந்த முகத்தோட இன்ஸ்பெக்டரைப் பாக்கிறது?”

“அப்போ டெபுடி கமிஷனர் அங்கிளைப் பார்த்து துப்பாக்கி லைசன்ஸ் கேட்போமா?”

“அது கிடைக்கிறதுக்குமுன்னாடியே என்னைத் தீர்த்துடுவாங்க"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/117&oldid=636557" இலிருந்து மீள்விக்கப்பட்டது