பக்கம்:தாழம்பூ.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. தாழம்பூ

“அப்போ என்னதான் செய்யறது?” “அதுதான் எனக்கும் புரியவில்லை.”

“அப்படியே அவுங்க வெட்டுறதா இருந்தால், நம்ம இரண்டு பேரையும் சேர்த்து வெட்டணும். உங்களைப் பிரிஞ்சு என்னாலே இருக்க முடியாது. ஆமா முடியாது தான். நெசமாத்தான். சத்தியமாத்தான்.”

பாமாவால், அழுகையை அடக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தாரின் கவனத்தை அவள் அழுகை கவரப் போவதுபோல் இருந்தது. ஆகையால், இளங்கோ அவர்களின் கண்களில் பாமாவின் முகம் படாதபடி அட்ஜஸ்ட் செய்து நின்றான். அவளை அதிசயத்துப் பார்த்தான். எழுபது வயதுப் பாட்டியை, ஐம்பது வயது அம்மாவை அவளாக அனுமானித்தான். இறுதியில் பாமாவை, பாமாவாக அனுமானித்து அவளை பைக்கில் ஏறும்படி சைகை செய்தான். இந்தச் சமயத்தில் ஒரு மீசைக்காரன் அவனைப் பார்த்து வந்தான். உடனே பாமா பயந்துபோய் அவனை அவசரப்படுத்தினாள். அந்த மீசை இளங்கோவிடம் மணிகேட்க வந்தது, அவர்கள் இருவருக்குமே தெரியாது. எதிரில் ஒருமாதிரி படுகிற அனைவருமே அவர்களுக்கு சரோசாவின் கையாட்களாகத் தோன்றினார்கள். இளங்கோவும் வண்டியை ரவுடி வேகத்தில் ஒட்டினான். யாராவது எதிரே பட்டாக்கத்தியை எடுத்தால் அவர்கள் மீது அப்படியே வண்டியை மோதவேண்டும் என்றுமுரட்டுத்தனமாக நினைத்தான்.உயிர்ப்பயம் அவனைக் கோழையாகவும், வீரனாகவும் மாறி மாறி மாற்றிக் கொண்டிருந்தது.

இதற்குள் சிவப்பு சிக்னல் வந்தது. பச்சை சிக்னலுக்காக பின்னால் காத்திருக்க நிதானமற்ற பேர்வழிகள், வண்டிகளை கோலம் போடுவது மாதிரி அங்குமிங்குமாய் வளைத்து ஒரு போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது தற்செயலாக எதிர்த் திசையில் இருந்த பஸ் நிலையத்தைப் பார்த்த இளங்கோ நிமிர்ந்தான். இதனால் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/118&oldid=636558" இலிருந்து மீள்விக்கப்பட்டது