பக்கம்:தாழம்பூ.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

சித்தரிப்போடும் இரட்டை நோக்கத்தோடு, இந்த நாவலை எழுதினேன். கூடவே, கள்ளச்சாராயம் காய்க்கப்படும் ‘கலையை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் போய் தெரிந்து கொண்டேன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர். செந்தில்நாதன், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனது குடும்ப நண்பர். அவர் அண்ணன் ச ராசமாணிக்கமும் நானும், நேருதாசன், பகத்சிங், தமிழ்மணி, தர்மலிங்கம், பலராமன் போன்ற தோழர்களும் சேர்ந்து, 1958-ம் ஆண்டு வாக்கில் தேசிய முழக்கம் என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறோம். இவர்களோடு, தோழர் செந்தில்நாதனும் அந்தக் காலகட்டத்தில், என் சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

தோழர். செந்தில்நாதனின் அணிந்துரை, அடிப்படை மக்களைப் பற்றிய இந்த படைப்பிற்கு வலிமை சேர்க்கிறது. ஜனரஞ்சகத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்து, இந்தக் காலகட்டத்தில் ஒரு கருத்துப் போராகவே நடை பெற்று வருகிறது. இது, இப்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. தரமான வாசகர், எந்தப் பக்கம் முகம் திருப்புவது என்று புரியாமல் தவிக்கிறார். மேட்டுக்குடி எழுத்தாளர்கள், இவரது முகத்தை பளவந்தமாக திரும்பப் பார்க்கிறார்கள். என்னைப் போன்ற எழுத்தாளர்களும், தோழர் செந்தில்நாதன் போன்ற சமூகச் சிந்தனையாளர்களும் இந்த வன்முறை திருப்பிலிருந்து வாசகர்களை, மீட்டெக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.

மக்கள் எழுத்து என்பது மலிவு எழுத்தல்ல, மாறாக எந்த மக்களிடம் நிகழ்வுகளையும், மொழியாடல்களையும் உள்வாங்குகிறோமோ, அவற்றை, அந்த மக்களுக்கே, விஞ்ஞான பூர்வமாக, அவர்களின் மானுட நம்பிக்கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/12&oldid=636560" இலிருந்து மீள்விக்கப்பட்டது