பக்கம்:தாழம்பூ.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தாழம்பூ

தோளில் கைபோட்டிருந்த பாமா அவனது முகத்தை தன் பக்கமாகத் திருப்பிக் கேட்டாள் :

“என்ன ஆச்சு உங்களுக்கு?”

“எங்க ஆபீஸரு. அதோ, அந்த லேபர் இன்ஸ்டிடியூட்லே ஒரு விவரம் வாங்கிட்டுவரச்சொன்னாரு கருக்கெழுத்துல தேர்ச்சி பெற்ற ஒரு ஸ்டெனோவ ஆபீஸ்லே நியமிக்கணும். அதுக்கு டைப்பிங் வேகம் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் இருக்கணும். இந்த டைப்பிங் வேகம் சுருக்கெழுத்துலே இருந்து அதை அர்த்தப்படுத்தி டைப் அடிக்கிறதுக்கா, இல்லை ஒரு பாராவைக் கொடுத்து அதை டைப் அடிக்கிறதுக்கா என்கிறது எங்க ஆபீசுல யாருக்குமே தெரியல. இப்படித்தான் பல ஆபீகலே ஆபீஸர்களோட அறியாமையால், பல தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கிறது இல்லை.”

“அப்போ நானும் வாரேன். உங்களைத் தனியா விடமாட்டேன்.”

“அங்கே நேரமாகும். இப்ப பஸ்ல போயிடு. சாயங்காலமா ஆபீஸ்ல வந்து உன்னை பிக்கப் செய்துக்குறேன்.”

“சாக்கிறதையா போங்க. ஆபீசுக்கு வந்ததும் உடனே போன் செய்யுங்க. அதுவரைக்கும் என் மனது கேட்காது.”

பாமா, அப்போது வந்த ஒரு பஸ்சில் ஏறிக் கொண்டாள். இளங்கோ, அவள் டாட்டாவுக்கு, பதில் டாட்டா போடாமல், வண்டியை ஒடித்து வளைத்து ஒரு கற்றுச் சுற்றி, அந்தப் பெண் நின்று கொண்டிருந்த பஸ் நிலையத்தை நோக்கி வண்டியைப் பாய்த்தான். இதற்குள் அவள், அவன் வருவது தெரியாமல், ஒரு பஸ் நம்பரை உற்றுப் பார்க்காமலேயே அதில் ஏறிக்கொண்டாள். உடனே அவனும் அந்த பஸ்சை பாலோ செய்தான். அவன் மனதில் அழுத்திய குற்றச்சுமை அந்த பைக்கின் ஆக்சிலேட்டரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/120&oldid=636561" இலிருந்து மீள்விக்கப்பட்டது