பக்கம்:தாழம்பூ.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 107

அழுத்தியது. பாமாவிடம் பொய் சொன்னதை மனம் ஒப்பவில்லை. அவன், ஆபீசர் அப்படி ஒரு விவரத்தை கேட்டுவிட்டு வரச்சொன்னது உண்மைதான். அந்த உண்மையை தனக்குச் சாதகமாக வளைத்து, தர்மர், துரோணரை ஏமாற்றியது போல் தானும் ஏமாற்றி விட்டதாக நினைத்தான். ஆனாலும் அவளுக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்றுதான் அப்படிச் செய்ததாய் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அதேசமயம், ஒருத்தர் அவரது நோக்கங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக செயல்களாலேயே தீர்மானிக்கப்படுகிறார் என்று யாரோ ஒரு கிரேட்மென் சொன்னதாக ஒரு பத்திரிகையில் வெளியான வாசகங்கள் அவன் மனதை பாம்பாய் கொத்தின. அதையும் மீறி அந்த பஸ்சின் பின்பக்கம் பாம்பு போல் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தான்.

சரோசா இவளோ.. அவளோ... எப்படியும் அசல் சரோசாவைச் சந்தித்து. அவள் விடுதலைக்கு தானே காரணம் என்பதை விளக்கி, அவளிடம் இருந்தும், அவள் கும்பவிடம் இருந்தும், தனக்கு விடுதலை வாங்கியாக வேண்டும்.

அந்த கர்ப்பிணிப்பெண் பஸ்ஸிலிருந்து இறங்கி, லேசாய் திரும்பி ஓரங்கட்டிப் பார்த்தபடியே நடந்தாள். பிறகு இடுப்பைப் பிடித்துக்கொண்டு சிறிதுநேரம் நின்றாள். பிள்ளை வயிற்றுக்குள் மோதுகிறானாம்-மீண்டும்தன்பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தாள். பழைய கோவில் வளாகத்தின் முனைக்கு வந்ததும், மீண்டும் நின்றாள். அந்த வளாகத்தின் எல்லையில் மானுடக் கழிவுகளாய் உட்கார்ந்திருந்த மனித வரிசையில் ஒரு கிழவர் எழுந்து சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/121&oldid=636562" இலிருந்து மீள்விக்கப்பட்டது