பக்கம்:தாழம்பூ.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தாழம்பூ

குழந்தைபோல் தத்தித்தத்தி நடந்து அவளிடம் நெருங்கினார். அவரை - அந்த நயினாவை - அவள் தன் பக்கமாய் சாய்த்துக்கொண்டே, தன்னையே ஊன்றுகோலாய் பிடித்துவைத்தபடி அவரை நடத்திக்கொண்டே நடந்தாள்."இன்னா நயினா, எத்தனைவாட்டிச் சொல்றது? நாஸ்தா பண்ணினோமா, குப்புற அடிச்கப் படுத்தோமான்னு இல்லாமே, இங்கே உன்க்கி இன்னாவேல” என்று செல்லமாகக் கோபித்தபடியே, அவர்தலையில் படர்ந்த துரும்புகளைத் தட்டிவிட்டாள். அவரை அவரது வாடிக்கையான இடத்தில் குந்த வைத்துவிட்டு ஒரு ஒடுங்கு பாதைப் பக்கம் வந்தாள்.

ஒரு சின்ன பனித்துளி தன்னுள்ளே முழுப் பனையை பிரதிபலிப்பதுபோல், ஒடுங்கிய சந்தின் முனைக்கு அப்பால் தெரிந்த ஏரியாவை நோக்கி மெல்ல நடந்தாள். அந்தப் பாதையைத் தாண்டியதும் அந்தக் கோவில் மறைத்த சேரிப்பகுதி தென்பட்டது. குண்டும், குழியுமான சாலை. ஒற்றைக்கண் பிசாசுபோல் பாதாளச் சாக்கடைகளைக் காட்டிக் கொண்டிருக்கும் சைபூன்கள். பெருமூச்சுவிடும் கார்ப்பரேஷன் பம்புகள். வளைந்து நெளிந்து சென்ற அந்தப் பாதையின் இருபுறத்திலும் நாயர் தேநீர்க் கடைகள். நாடாரின் பலசரக்குக் கடைகள்; இண்டர்நேஷனல் முடிதிருத்தகங்கள்; சர்வதேச தையல் கடைகள், பலரை உருப்படாமல் செய்த ஒரு நடிகரின் மூஞ்சியை பல கோணங்களில் காட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தட்டிகளையே கவர்களாகக் கொண்ட ரசிகர் மன்றம்; மேடு பள்ளமுமான கோடுபோல தென்னங்கீற்று அடைத்த மறைவிடங்கள்; அந்த மறைவிடங்களையே எல்லைச் கவராகக் கொண்ட சேரிக் குடிசைகள். ஆங்காங்கே ஒடிக்கொண்டிருந்த பன்றிகள், நோயாளி நாய்கள்-இப்படி சாலையின் எல்லையின் ஓரங்கள் இரண்டும் சமத்துவம் இல்லாத கட்டிடங்களாய் நிரப்பப்பட்டிருந்தன. என்றாலும், அந்த ஒழுங்கீனமான கட்டிட வரிசைகளை புதைப்பது போல் அந்தக் கட்டிடம் கம்பீரமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/122&oldid=636563" இலிருந்து மீள்விக்கப்பட்டது