பக்கம்:தாழம்பூ.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

) தாழம்பூ

ஏதோ பதில் சொல்லப் போனபோது, இன்னொரு முகம் தோன்றியது. அது உடம்பை நிமிர்த்தியபோது தளதளப்பான வயிறு தெரிந்தது. கழுத்து செயின் தொப்புளை மறைத்தது. சரோசா அந்த முகத்திடம் முறையிட்டாள் :

“பாரு துரையண்ணே! அக்கா கதவ தெறக்கமாட்டக்காள்.”

‘அடேடே, சரோசாவா? ஒனக்காகக் காத்துக்காத்து கண்ணே நோவெடுத்துட்டுது. வழியிலே பழகாத நாய் ஏதும் மடக்கிட்டோன்னு பயந்துட்டேன். ஏய் சாந்தி, கதவத்தெறமே.”

“சாந்தி, சாந்தியில்லாமல் முனங்கிக்கொண்டே அந்தக் கதவை, வீறிட்டுக் கத்தும்படி இழுத்தபடியே திறந்தாள். சரோசாவோ சொந்த வீட்டுக்குள் நுழைவது போல, உள்ளே போனாள். துரையையும், பெரிய வீடாகிப் போன அவன் சின்ன வீட்டையும் ஒருக்களித்துப் பார்த்துவிட்டு, அவர்கள் நின்ற வரவேற்பு அறையைத் தாண்டி, இரண்டாகப் பிரிந்த ஒரு கிளை அறைக்குள் போனாள். வயிற்றில் ரப்பர் கயிற்றால் கட்டியிருந்த கால்பந்து பிளாடரை எடுத்து, அங்கிருந்த ஒரு மேஜையில் வைத்தாள். இதனால், பின்பக்கம் ரப்பர் கயிற்றின் பிடி தளர்ந்தது. பிட்டத்தில் பொருத்தப்பட்ட இன்னொரு பிளாடர் கீழே விழப்போனது. சரோசா அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். பிறகு அதை மேஜை தொட்டிலில் கிடத்தினாள். இப்படி தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டு, ஜாக்கெட்டை இழுத்துவிட்டு கருங்கிப்போன பாவாடையை கால்வரைக்கும் பரப்பிவிட்டுக் கொண்டு, புடவையை கட்டினாள்.

சரோசா, பட்டறிவால் பேசினாள் :

“இனிமே ரூட்ட மாத்தணுமுண்ணா! பஸ்கல ஏறப்போ ஏறுக்கு மாறா பார்க்கிறாங்க. நாவலூர் பக்கமும் ஒரே ரெய்டு. இரண்டு மணிநேரம் காத்திருந்தேன். ஸ்பாட்டுக்கு வராண்டாம்னு மணி சொல்லிட்டான். சவுக்குத் தோப்புக்குள்ள போகச் சொன்னான். அங்க வந்து சரக்கக் கொடுத்தான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/124&oldid=636565" இலிருந்து மீள்விக்கப்பட்டது