பக்கம்:தாழம்பூ.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம்

“நீ சொல்றதும் சரிதான். இனிமே கடல்வழியா சரக்கக் கொண்டு வரணும். கர்ப்பிணிப் பொண்ணுவேடம் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிப்போச்சு.”

“எனக்கு பயம்மா கீதுண்ணா. போலீஸ்ல அவ்வளவு ஒத தின்ன பொறகு வாய்க்கையே வெறுத்திட்டு. பழையபடி மாட்டிக்கிட்டா ஒடம்பு தாங்காதுண்ணா.”

“தொழிலுல இதெல்லாம் சகசம்மே.”

துரைக்கு, நாற்பது வயதிருக்கும். கறுப்பு என்றாலும், காக்கா பொன்கறுப்பு, துருத்திய வயிறு என்றாலும் அதைத் துாக்கி நிறுத்தும் உறுதியான மார்பெலும்பு, சரோசாவின் வயிறு மேலே பிரசவித்த சரக்குகளை கரங்களில் ஏந்தி முன் நடந்தான். சரோசா, அவன் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள். ஆறுதலுக்காகக் கூட ஒருவார்த்தைசொல்லாமல்,தொழில் தர்மத்தை அவன் சொல்லி க்காட்டியது, வேணுமுன்னா இருந்தா இரு இல்லாவிட்டால் போ’ என்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது. அவள் யோசித்து நடந்ததால் நிலைப்படி நெற்றியில் தட்ட, அதை தடவிவிட்டுக் கொண்டே குனிந்து பின்புற வரவேற்பறைக்கு வந்தாள். அங்கே கிடந்த இரண்டு நாற்காலிகளின் சட்டங்களிலும், இருகால்களையும் ஒருகால் மாதிரி போட்டுக் கொண்டு இரண்டுபேர் அட்டகாசமாய் கிடந்தார்கள். அவளைப் பார்த்ததும் தங்கள் பக்கம் வரும்படி கையசைத்தார்கள்.அவளோ செல்லாக்கோபத்தை பொறுமையாக்கி, புறவாசலில் இருந்து கீழே குதித்தாள்.

புறவாசலையொட்டி ஒரு பெரிய பந்தல் போடப் பட்டிருந்தது. தென்னங்கீற்றிலான மூங்கில் பந்தல். மூன்று பக்கம் மறைத்து ஒரு பக்கத்தை வாயாகக் காட்டிக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் கடலே ஒரு அடைக்கலம் மாதிரியும் காட்சியளித்தது. இந்தக் கடலிலிருந்து தோணிகளில் சரக்குகள் வருவதும் போவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/125&oldid=636566" இலிருந்து மீள்விக்கப்பட்டது