பக்கம்:தாழம்பூ.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}}4. தாழம்பூ

கோவிந்தின் சம்மதமில்லை என்பது போல் வாயை பன்றி உதடுகள் மாதிரி ஆக்கிக் காட்டினான். பிறகு எகிறப்போனான். எகிறினான்.

“இன்னாடா துரை. பெரிய தொரைன்னு நெனைப்பா? ருேத்து பெய்த சாராய மழையில இன்னிக்கி வந்த காளான் பய நீ. நாலு ரூபா தேங்காய ரெண்டு ருவாய்க்கி கேக்கிறீயே, இந்தக் குப்பத்துல நீ மட்டும்தான் காய்க்கிறேங்கிற திமிரா, இன்னாடா?”

துரை, அவனை அலட்சியமாகப் பார்த்தான். நீயெல்லாம் தாங்குவிடாயா என்பது மாதிரி. இதற்குள் கோவிந்தின் உள்ளே ‘சரோ. சரோ...’ என்ற சத்தம் கேட்பதைப் பார்த்து எட்டிப் பார்த்தான். பிறகு வாயை சுருக்கி, தலையை குறுக்கி அவர்களின் கால்பக்கத்திற்கு இணையாக தலையைக் கவிழ்த்துக்கொண்டே கெஞ்சினான் :

‘நீங்கோ அந்தண்ட இருக்கத பார்க்கல சாரே, மன்னிச்சிடுங்கோ சாரே.”

உள்ளேயிருந்து ஒரு குரல் அதட்டியது:

“ஜல்தியா குடிச்சிட்டு ஜல்தியா போயேன்யா. வெளியில போய் நாங்க இருக்கோம்னு ஒளறி வச்சே, கையில காப்புதான்.”

“அய்யோ சாரே, அப்படிச் செய்வேனா? உங்கள இன்னிக்கி நேத்துமா பாக்கேன், எத்தன வருஷமா பாக்கேன்.”

அந்தப் பந்தலில் மரத்துணில் சாய்ந்தபடி கல்லுளிமங்கனாக இருந்த ஒருத்தர், இப்போது கீழே விழுந்தார். பறவைகள் மாதிரி விநோதமான சத்தங்களை எழுப்பினார். இதற்குள் அம்மைத் தழும்பனும், டவுசர் போட்ட ஒருவனும் துரையைப் பார்க்க, அவன் கண்ணடித்தான். அந்த ஆசாமியின் சட்டைக்குள் கைவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளில் இரண்டை எடுத்து கருட்டு மாதிரி காதில் மடித்து வைத்துக்கொண்டு, மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/128&oldid=636569" இலிருந்து மீள்விக்கப்பட்டது