பக்கம்:தாழம்பூ.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 5

நோட்டுகளை அவரது பைக்குள் திணித்துவிட்டு, அவரை அலாக்காகக் துக்கிக்கொண்டு வெளியே போனார்கள். இந்தச் சமயத்தில் உள்ளே இருப்பவர்கள் “சரோ. சரோ. கமான்” என்று சத்தமிட்டார்கள்.

சரோசாவுக்கு எரிச்சலாக இருந்தது. கஷ்டப்பட்டு கர்ப்பிணியாய் வந்த தன்னை அலட்சியமாகப் பேசி அந்த உழைப்பை அங்கீகரிக்காத துரையின் மீது ஒரு கோபம். சொந்தப் பெண்டாட்டியைக் கூப்பிடுவது போல கூப்பிடும் போலீஸ் துரைமார்கள் மீது இன்னொரு கோபம். அடி அடியென்று அடித்துவிட்டு, இப்போது அணைக்கத் துடிக்கும் அந்தக் கரங்கள் அவளுக்கு வெட்டரிவாளாகத் தோன்றின. இவ்வளவுக்கும் காரணம் யார்? அவன். அந்தக் குயந்தப் பய அவன விடப்பிடாது.

சரோசா தனக்குள்ளேயே அழுது கொண்டிருந்தாள். போதாக் குறைக்கு, துரை அண்ணன் வேறு அவள் கர்ப்பிணி கஷ்டத்தை கண்டுக்காமல் அலட்சியப்படுத்தியது அழுகையை அழுத்தமாக்கிறது. இந்தச் சமயத்தில் அந்தப் பெரியவரை வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தவர்கள், காதில் மடித்து வைத்த இரண்டு நோட்டுக்களை துரையிடம் கொடுத்துவிட்டு, சரோசாவைப்பார்த்து ஒரு தகவல் சொன்னார்கள் :

“சரோ! நீ சொல்லுவியே கொழந்தப்பய இளங்கோ, கோவில் பக்கமா ர்வுண்டடிக்கட்டு நிக்காம்மே”

சரோசா ஆணையிடுவது போல் பேசினாள் :

‘நான் பஸ்ல வரும்போதே அந்த கஸ்மாலம் பாலோ பண்ணுவதுபோல தோணிச்சு வீட்டுக்குப் போறான்னு நினைச்சது எவ்வளவு தப்பாப்போச்சி. என் நிம்மதியக் கெடுக்கத்துக்குன்னே முளைச்சிருக்கான் அந்த சோதாப்பயல். என்ன ஏதாவது செய்யும் முன்னாடி, நீங்க அவன ஏதாவது செய்துட்டு வாங்கோ'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/129&oldid=636570" இலிருந்து மீள்விக்கப்பட்டது