பக்கம்:தாழம்பூ.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாழம்பூ

அந்த இருவரும் கீழே கிடந்த இரண்டு உருட்டுக் கட்டைகளை எடுத்துக்கொண்டு புறப்படப்போனார்கள். “பாவம், அல்பாய்க அவனுக்கு” என்று ஒருவன் சொல்லிவிட்டு வெறிச்சிரிப்பாய் சிரித்தான்.

அந்தப் பந்தல் மாளிகையிலிருந்து வெளியேறப் போன இரண்டு கிங்கரர்களும் உடம்பை குழைவாக்கிக் கொண்டே குழையடித்தார்கள். “வாங்கண்ணே வாங்கண்ணே” என்று பரபரப்பான குரலோடு, கண்ணுதவி இல்லாமலே பின்னோக்கி நடந்தார்கள். உள்ளே வந்தவர், அந்த மணல் பரப்பில் வளையம் போட்டுக் கிடந்தவர்களை நோட்டமிட்டார். கருவாடும், கிளாகமாக இருந்த அவர்கள், அவரை கண்டுக்கவில்லை. ஒரேயொருத்தர் நாலு கிளாசுகளை உள்ளே தள்ளியபிறகு ஞானத்தின் உச்சநிலையில் இருந்தார். பரம சாதுவாகத் தோன்றிய அவர், அந்தப் புதிய மனிதரைப் பார்த்து ஆசீர்வாதம் செய்ய கையை துாக்கியபோது, துரை அந்த கைக்குள் இன்னொரு கிளாசை வைத்தான்.

உள்ளே வந்தவருக்கு, ஐம்பது வயதிருக்கலாம். முகம் காய்ப்புக் காய்ப்பாயிருந்தது. தலை பம்மைபோல் தோன்றியது. ஆசாமி கொஞ்சம் குள்ளம்; ஆனாலும் அழுத்தமான உடம்பு. பழுத்த மஞ்சள் நிறத்தில் சபாரி உடை. தலைமட்டும் கொக்கு மாதிரி துண்டாகத்தெரிந்தது.ஆக்கல் (ஊரல்), காத்தல்(காய்ச்சல்)அழித்தல் (விற்றல்) ஆகிய முப்பெரும் தொழில்களைச் செய்யும் மூர்த்திமும், ஒருகாலத்தில்பைசாக்களுக்காக ஏங்கியவரை, இப்போது லட்சங்கள் ஏக்கமாய் பார்க்கின்றன. பேங்கில் உள்ள லாக்கர்கள் ராமனுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/130&oldid=636572" இலிருந்து மீள்விக்கப்பட்டது