பக்கம்:தாழம்பூ.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தாழம்பூ

“ஆமாண்ணே. என்ன போலீகல பிடிச்கக்கொடுத்த ஒரு பிள்ளாண்டான் ரோதனை தாளலண்ணே. அண்ணன் கம்பெனியில சரக்க எடுத்துக்கிட்டு பஸ்கல கர்ப்பிணியா சிங்காரிக்கட்டு வந்தேன்னா, இவன் என்னடான்னா மோட்டர் பைக்கில பாலோ பண்றான். இப்பகூட மெயின் ரோட்ல நிக்கானாம். எனக்கு பயமா இருக்குண்ணே. பழையபடியும் உள்ளே போயிட்டா அப்பால நயினா கதி?”

துரை, சரோசாயை அண்ணன் போனபிறகு தாளிக்க வேண்டும் என்று உடனடியாகத் தீர்மானித்தான். ஆனால், சரோசாவோ கண்கள் துருத்தி நிற்க, லேசாய் விம்மப்போனாள். அதற்குள் அண்ணன், அவள் தலையை தடவியபோது, அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டது. அவரும், அங்கே நின்ற அம்மைத்தழும்பனை அதட்டினார்:

“ஏண்டா டேய், வெள்ளையா! நம்ம ஏரியாவில, அவன் நம்மள டயாய்க்கிறான்னா என்னடா அர்த்தம்? இன்னுமா அந்தப் பயல விட்டுவச்சிருக்கீங்க? உங்களால முடியாட்டி சொல்லுங்கடா சோதாப்பசங்களா..”

‘அவன ஒழுங்கு பண்ணத்தாண்ணே புறப்பட்டோம். அதுக்குள்ளே அண்ணன் வந்துட்டீங்க. நாலு நாளைக்கி முன்னேயே முடியவேண்டிய கேக. சரோசாதான் தடுத்துட்டாள்.”

‘நெசந்தாண்னே, இவங்கோ அவன சாவடியா அடிச்சிட்டால், அப்பால பங்களாக்காரங்க என்னை போலீகல ஒப்படைச்சிடப்படாதேன்னு பயந்தது நிசந்தாண்ணே. என்னோட பயத்தில நியாயமிருக்குண்ணே. ஏன்னா, பழகின போலீசே பயங்கரமா அடிச்சிட்டாங்கண்ணே.”

“போலீஸ், பெரிய போலீஸ்! நானு பார்க்காத போலீசா? பொறுப்ப என்கிட்ட விட்டுடு. அவன் பங்களாவக்கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/134&oldid=636576" இலிருந்து மீள்விக்கப்பட்டது