பக்கம்:தாழம்பூ.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 21

இடிச்சிக்காட்டுறேன். சில விஷயங்களுல நாம முந்திக்கணும். அவன ஒன்னை பாலோ செய்யறது, என்னை செய்யறதுமாதிரி. இன்னிக்கே அவன ஒரு வழி பண்ணிடறேன்.”

அண்ணன், சபாரி சட்டையை தூக்கிப்பிடித்து, பனியன் போடாத வயிற்றைக் காட்டியபோது, பத்துப்பதினைந்துபேர் தற்செயலாய் வருவதுபோல் ஒருவர்பின் ஒருவராக வந்தார்கள். டிகாய் பேன்ட் போட்டு, சட்டைகளை இன் செய்த மூன்று.பேர். பின்பக்கமாய் முடிவளர்த்த மூன்றுபேர். அகலவாக்கில் இரண்டு, நீளவாக்கில் நான்கு... அத்தனைபேரும் அண்ணனை ஒரே கண்ணாய் பார்த்தார்கள். ஆனால் அண்ணனோ கற்றும்முற்றும் பார்த்தார். அதைப் புரிந்துகொண்ட துரை, இன்னும் குடிக்கக் கேட்ட பரமசாது மனிதரையும், மணலில் புரண்ட ஒருவரையும் கழுத்தைப் பிடித்து துாக்கியபோது நான்கைந்துபேர் அவர்களை மென்மையாகப் பிடித்துக் கொண்டு வெளியே போனார்கள். வெளியே கோவிந்தன் கூப்பாடு போட்டான். ‘இன்னாய்யா பொண்டாட்டிகூட இப்படி தொடமாட்டாள். அப்படி தொடரீங்களே. டச் பண்ணாதய்யா. நீயுமாச்க உன் சரக்குமாச்சு, ஒரு சொம்பு கண்டக்கஞ்சிக்கி ஒன் ஸ்பெஷலு ஜமாய்க்குமா? இன்னாய்யா ஸ்பெஷலு. பொல்லாத ஸ்பெஷலு:”

வெளியே போட்ட கூப்பாட்டை அண்ணன் சிரித்துக் கொண்டே உள்வாங்கினார். பிழைச்சுப் போகிறான் என்பது மாதிரியான சிரிப்பு. எவரையும் தன்னால் எதுவும் செய்யமுடியும் என்றாலும், அப்படி முடியக்கூடியதை செய்யாமல் இருக்கும் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தும் சிரிப்பு. அந்தச் சிரிப்பு போனதும், அண்ணன் கிசுகிசுப்பாகப் பேசினார் :

“இன்னிக்கி நைட்ல கரைக்டா ஒருமணிக்கு, நம்ம லாரி தியாகராய நகர்ல ஒரு பங்களாவுக்குப் போகுது. அந்த வீட்டுல இருக்கிறவங்கள நாம வழக்கமா செய்யறது மாதிரி செய்துடனும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/135&oldid=636577" இலிருந்து மீள்விக்கப்பட்டது