பக்கம்:தாழம்பூ.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தாழம்பூ

நம்ம ஆசிரமத்துக்கு எட்டு மணிக்குள்ள வந்திடுங்க. இந்தா துரை, ஆயிரம் ரூபா... பசங்களுக்கு கேக்கறதயெல்லாம் கொடு. ஏழரைக்கெல்லாம் அவங்கள வழியனுப்பி வைக்கிறதுக்கு நீதான் காரண்டி”

“சரிண்ணே! எந்த பங்களா? என்ன விஷயமாய்?”

“ஒனக்கு சம்பந்தமில்லாத விஷயம். ஆனாலும் சொல்றேன். அந்தப் பங்களாவை ஒரு சேட்டு இருபது லட்ச ரூபா கொடுத்து வாங்கியிருக்கான். ஆனா அந்த வூட்டுல பத்து வருஷமா வாடகைக்கு இருக்கிற சோமாரி பெரிய ஆபீசராம். காலியண்ண மாட்டானாம். கோர்ட்டுக்குப் போடான்னு சொல்லிட்டானாம். சேட்டு, என்னையே கோர்ட்டா நினைக்கிறான். காலி பண்ணாதவனை ‘காலி பண்ணாம முடியுமா?”

அனைவரும், அண்ணனை அதிசயித்துப் பார்த்தார்கள். சிலர் விசிலடித்துக் கொண்டார்கள். துரை தவிர மற்றவர்களுக்குக் கொண்டாட்டம். ஆசிரமம் என்று சொல்லப்படும் அனாதரவான இடத்தில், உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் உள்ள ஒரு கல் கட்டிடவீட்டுக்குள் இருக்கும்சைக்கிள் செயின்கள்,பட்டாக்கத்திகள், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு லாரியில் போகவேண்டும். அண்ணன் காட்டுற பங்களாவில இருக்கிற வங்களை ராத்திரியோட ராத்திரியா துாக்கித்துாக்கி லாரியில போடணும். உயிருக்கு ஆபத்து இல்லாம ஊமைக் காயங்களாய் ஏற்படுத்தி, தட்டுமுட்டுச் சாமான்களோட ஏத்தணும். அப்புறம் தெற்கே செங்கல்பட்டுப் பக்கமோ, வடக்கே எண்ணுார் பக்கமோ நடுக்காட்டுல விட்டுடனும்.ரோந்துபோலீஸ் பார்த்தால், அண்ணன் கவனிச்சுக்குவார். அந்த வாடகைக்கார ஆபீசரு குடும்பத்தோட கோர்ட்டுக்குப்போனால்..? அண்ணனுக்கு அதுக்குன்னே வக்கீலுங்க இருக்காங்க. அப்படிப்பட்ட ஒருவீட்டுல இப்படிப்பட்ட ஒரு குடும்பம் இல்லவே இல்லன்னு நிரூபிச்சுடுவாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/136&oldid=636578" இலிருந்து மீள்விக்கப்பட்டது