பக்கம்:தாழம்பூ.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 123

கையாட்கள், ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆனந்தக் கூத்தாடியபோது, துரை மட்டும் வயிற்றைத் தடவினான். அண்ணனுக்கு இந்த விவகாரத்தில் குறைஞ்சது அய்ந்து லட்ச ரூபாய் கிடைக்கும். இந்தப் பசங்களுக்கு மொத்தம் இருபதாயிரம். எனக்கு அஞ்சே அஞ்சாயிரம். அற்பக்காக. அப்புறம் அவ்வளவும் முள்ளங்கிப் பத்தையா அண்ணனுக்கே! அட கண்றாவியே! இன்னாய்யா நியாயம்?

அண்ணன், தனதுமோவாயைமோப்பம் பிடிப்பதைப்பார்த்த துரை, சமாளித்தான். ‘வூட்டுக்குள்ள வாங்கண்ணே’ என்று உள்ளே நடமாடிய வீட்டுக்காரியை நோட்டம் போட்டபடியே கேட்டான், நானு இல்லாதப்போ முன்பக்கமா வந்து அந்த முண்டக்கிட்ட குழையுறது. இருக்கப்போ பின்பக்கமா வாரது. இந்த அண்ணன் எந்தப் பக்கத்துல சேர்த்தி?

அண்ணன், லேசாய் புன்முறுவல் செய்தார். பிறகு ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை சரோசாவின் கைகளில் திணித்துவிட்டு, “சீக்கிரமா வாங்கடா, முடிச்சப் பொறவு குடிக்கலாம்; குடிச்சப் பொறவு முடிக்க முடியாது” என்று சொல்லிவிட்டு வெளியேறினார். -

அந்த செட்டு, அண்ணன் பின்னால் இப்போது போகக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டு அங்கேயே நின்றது. ஆனால், அண்ணனுடன் உருட்டுக் கட்டைகளோடு நான்கு பேர் புறப்பட்டார்கள். அவர்களுக்கு எதிரே வந்த பன்றிகளையும், கோழிகளையும் விரட்டியபடியே வழியமைத்துக் கொடுத்தார்கள். அண்ணன் கோவில் வளாகத்திற்கு வெளியே வந்தபோது, அவர் முன்னால் ஒரு மாருதி கார் வந்து நின்றது. உட்காரப்போன அண்ணனைப் பார்த்துக் கண்ணடித்து, அருகேயுள்ள ஒரு விடுதியில் இளங்கோ ஒரு சர்பத்தையோ, குளிர்பானத்தையோ உறிஞ்சிக் கொண்டிருப்பதைச் கட்டிக்காட்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/137&oldid=636579" இலிருந்து மீள்விக்கப்பட்டது