பக்கம்:தாழம்பூ.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 125

வாகனத்திற்குள் அங்குமிங்குமாய் நெளிந்து கொண்டிருந்தபோது, இரண்டு பேர் வந்து பைக்கை அவனோடு சேர்த்துத் தரதரவென்று இழுத்தார்கள். பிறகு அந்த பைக்கைத் துாக்கி வேறுபக்கமாய் தள்ளினார்கள். இரண்டுபேர்பெரிய பெரிய கற்களை எடுத்து அந்த பைக்கின் சக்கரங்களிலும், கண்ணாடிகளிலும் போட்டார்கள். கண்ணாடிச் சிதறல்கள் அங்குமிங்குமாய் துள்ளின. ஒருவன் சக்கரங்களின் டயர்களில் காற்றைப் பிடுங்கிவிட்டான். வேலை இல்லாமல் இருந்த இரண்டுபேர் லேசாய் தலையைத் துாக்கிய இளங்கோவை முடியைப் பிடித்துத் துாக்கினார்கள். ஒருவன் வாயில் குத்துவிட்டான். இன்னொருத்தன் அவன் இடுப்பிலும் காலிலும் உருட்டுக்கட்டையால் அடித்தான். இளங்கோ சுருண்டு விழுந்தான். இரண்டு கண்களுக்கும் இடையே இரண்டு முட்டிக் கைகளையும் வைத்துக்கொண்டு விழித்தான். சத்தம் போட வேண்டும் என்றோ, எதிர்த்து அடிக்க வேண்டும் என்றோ அவனுக்கு எண்ணம் வரவில்லை. தட்டுத்தடுமாறி எழப்போன அவனை மீண்டும் தரையில் ஒரு உதை கொடுத்துக் கிடத்தினார்கள்.

அங்குமிங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தவர்கள், சிறிது தொலைவில் ஒன்று சேர்ந்து கும்பலானார்களே தவிர, அந்த ‘உதைக் களத்தை நெருங்கவில்லை. வேடிக்கை பார்ப்பதுபோல் போன கார்களை, பின்னிருக்கை மனிதர்கள், முன்னிருக்கை டிரைவர்களின் முதுகுகளைத் தட்டி அவசரப்படுத்தினார்கள். பல பெட்டிக் கடைகள் மூடப்பட்டன. சில்லரைக் கடைக்காரர்கள் எதிர்ப்பக்கம் குனிந்து கொண்டார்கள். சில கடைகள் எதுவுமே நடக்காதது போல் அப்படியே திறந்திருந்தன. வீட்டு வேலைகளுக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பெண்கள், விசனத்தோடு நின்றார்களே தவிர, அந்த அடாவடியை தட்டிக் கேட்கவில்லை. தொலைதுாரத்து வீடுகளிலும் உன்னிப்பான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/139&oldid=636581" இலிருந்து மீள்விக்கப்பட்டது