பக்கம்:தாழம்பூ.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தாழம்பூ

அவன் மயக்கமாய் கிடந்த புதர்ப்பக்கமாய் வந்து போன ஸ்கூட்டர்கள் திரும்பிப் போயின. சிறிது தூரம் கடந்துபோய் வேடிக்கையாய் நின்றன. சில கார்கள் இதெல்லாம் சகஜம் என்பதுபோல் சகஜமாய் ஓடின. சில சைக்கிள்காரர்கள் ‘இந்தாங்கப்பா’ என்று சொல்லிவிட்டு நின்றபோது, அடித்தவர்கள் திரும்பிப் பார்த்து,"போயிக்கினே இருய்யா” என்று மிரட்டியதும், உருளைச்சக்கரங்களோடு ஓடிவிட்டார்கள். அந்தப் பக்கமாய் போன ‘கால்நடை மனிதர்கள், அவன் குடித்துவிட்டுக் கிடப்பதாய் நினைத்து"இந்த மாதிரி ஆட்கள் இப்படித்தான் கிடக்க வேண்டும்” என்று பேசிக்கொண்டே போனார்கள். அருகேயிருந்த பலமாடிக் கட்டிடங்களில் ஆண்களும், பெண்களும் வெளியே பால்கனிகளில் வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றார்கள். ஒரு கால் கூட, கீழே இறங்கவில்லை.

இளங்கோ மெள்ளமெள்ளச் செத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. காகங்கள், அவன் உடம்புக்கு மேலே ஆகாயத்தில் மொய்த்தன. அவனைக் கொத்தித் தின்பதற்காக சில ஆங்காங்கே உட்கார்ந்தன. பிறகு அவன் ஈன முனங்கலாய் முனங்குவதைப் பார்த்துவிட்டு, அது அடங்குவதற்காகக் காத்திருந்தன.

அந்தப் பக்கமாய் பூக் கூடையில்லாமல் தலைவிரி கோலமாய் வந்த ருக்குமணி, அப்படியே வாய் பிளந்து நின்றாள். அவன் இளங்கோதானா என்பதுபோல் கிட்டே நெருங்கிப் போனாள். பிறகு ‘அய்யய்யோ. அய்யய்யோ...’ என்று அரற்றினாள். அங்குமிங்குமாய் சுற்றி, அவன் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தாள். கை லேசாய் கட்டது போலிருந்தது. அருகே பலமாடிக் குடியிருப்புகளில் பால்கனிகள் மேல் திடீர் அவதாரம் எடுத்தவர்களை நோக்கி, கைகளை ஆட்டி வாங்கோ. வாங்கோ’ என்று சமிக்ஞை செய்தாள். அந்தத் தலைகள் உடனே மறைந்தன. அந்தச் சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனக்காரர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/142&oldid=636585" இலிருந்து மீள்விக்கப்பட்டது