பக்கம்:தாழம்பூ.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தாழம்பூ

‘இந்தாம்மா... இவன் என்ன செய்தானோ, ஏது செய்தானோ? எந்தப் பசங்களோ இவன செம சாத்தா சாத்திட்டுப் போயிட்டானுங்க. உனிக்கி இன்னாச்சு? நீதான் இத அடிச்சுப்போட்டுட்டு அழுகிறது மாதிரி நடிக்கேன்னு போலீஸ் புடுச்சிட்டுப் பூடும்மா, போலீசுக்குக் குற்றவாளி முக்கியமில்ல; குத்தஞ் செஞ்ச இடத்துல நிக்கறவனுகதான முக்கியம். பேசாம போய்க்கினே இருப்பியா. அய்ய ஒன்னத்தாம்மே.”

கீழே உட்கார்ந்து, இளங்கோவின் உச்சந்தலையிலிருந்து கொட்டிய செந்நீரைத் துடைத்துக் கொண்டிருந்த ருக்குமணி ஆவேசப்பட்டு எழுந்தாள். இடுப்பின் இருபக்கமும் கைகளை வில்போல் வளைத்துக் கொண்டு, வாய்க்கு வெளியே நாக்கை அம்புபோல் நீட்டிக்கொண்டு தெனாவட்டாய் நின்றவளையும், மாடிக் குடியிருப்புகளில் மறைந்து நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும் மாறிமாறிப் பார்த்தபடியே கத்தினாள் :

“ஏம்மா, இந்த அநியாயத்த பார்த்துட்டு போயிக்கினே கீறதுக்கு நான் என்ன பங்களாக்காரியா? அடேய்! பங்களா பசங்களா! பண்ணிப் பயல்களா இந்த உடம்புகள வெச்சிக்கிட்டு ஏண்டா நிக்கிறீங்க? ஒருத்தன் நாய் மாதிரி நடுரோட்ல கெடக்கான். அவனை என்னான்னு வந்து பார்க்கப்பிடாதாடா? இதேமாதிரி ஒரு நாய் செத்துக்கிடந்தாகூட உடனே கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணுவீங்களேடா... ஒரு மனுஷனுக்கு ஏண்டா செய்யமாட்டேங்கிறீங்க? அல்பங்களா”

பூக்கார ருக்குமணி ஆங்காளியாய், ஒங்காளியாய் நடுக்காவையில் ஆாண்டவமாடினான்.மாடி வீட்டுக்காரர்களுக்குக் கேட்க வேண்டும் என்பதுபோல் அந்தக் குடியிருப்புப் பகுதிக்கு ஒடியோடிப் போய் திட்டினாள். அவள் கையாட்டியும் நிற்காமல் போன ஒரு அம்பாசிடர் கார்மீது கல் எறிவதற்காகக் கீழே கூடக் குனிந்தாள். பிறகு, மேலே தென்பட்ட குடியிருப்புக்காரர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/144&oldid=636587" இலிருந்து மீள்விக்கப்பட்டது