பக்கம்:தாழம்பூ.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 13]

பார்த்து “நீங்க நாசமாப்போக! நீங்க சாகும்போது ஒங்கப் பொணத்துல ஒரு பூக் கூட விழாது’ என்றாள். பின்பு செய்வதறியாது திகைத்து நின்றாள்.

அங்கே வந்துநின்ற பெண், ருக்குமணியின் போக்கால் அதிர்ந்து போனாள். லேசாக இளகிய மனதை பலவந்தப்படுத்திக் கொண்டு, “ஏய், ஒன்னத்தான், பேசாம போயிக்கினே இரும்மே” என்றாள்.

ருக்குமணி வெடித்தாள் : “நான் என்ன எருமக்கடாவாடி மே.'ங்கறே? இந்தப் பிள்ளாண்டானப்பத்தி ஒனக்குத் தெரியுமாடி? இதுக்கும் ஒரு சேரிப் பொண்ணுக்கும் தகராறு வந்து, அந்தப் பொண்ண, இது போலீகல ஒப்படைச்சுது. போலீஸ்காரனுங்க என்னடான்னா அந்தப் பொண்ணுதான் என் குழந்தையக் கொன்னதா வழக்கு ஜோடிக்கப் போனாங்க. இது அநியாயம்னு தெரிஞ்ச இந்தப் பிள்ளாண்டான், பெரிய போலீஸ் ஆபீசருக்கிட்ட என்னையும், கட்டிக்கப்போற பொண்ணையும் கூட்டிக்கினுப் போயி, அந்தச்சேரிப் பொண்ணுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து. இன்னாப் பிரயோசனம்? கட்சீல, அந்த இன்ஸ்பெக்டர் சொன்னாப்புல அந்த ரத்தக்காட்டேரி - நன்றிகெட்ட நரி - அதான் அந்த சரோசாவோ, கிரோசாவோ, இந்தப் பிள்ளாண்டான ஆள் வைச்சி அடிச்சி, இப்படி அக்கிரமம் பண்ணிட்டாள் இந்த மவராசன் கொக்குக் கொத்தின நண்டு மாதிரி துடிக்குது. எப்படி இத அம்போன்னு விட்டுட்டுப் போக முடியும்?”

ருக்குமணி விம்மினாள். அங்கே நின்றவள், கைகளை நெறிப்பதையோ, இளங்கோவின் பக்கம் நெருங்கி அவனை மவுனமாகப் பார்ப்பன்த்யோ, இவன் சரியாக கவனிக்கவில்லை. இதற்குள் மீன்காரப் பெண்களும் அங்கே கூடிவிட்டார்கள். கூடைகளை இறக்கி வைத்துவிட்டு, அவற்றை காகங்கள் துழாவுவதையும் பற்றிக் கவலைப்படாமல், இளங்கோவின் பக்கம் போனார்கள். ஒருத்தி ஆலோசனை சொன்னாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/145&oldid=636588" இலிருந்து மீள்விக்கப்பட்டது