பக்கம்:தாழம்பூ.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தாழம்பூ

‘உசிரு இழுத்துக்கிட்டுக் கெடக்குது. உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டுப் போனா பிழைச்சுக்கும். பாவம் இந்த பையனப் பார்த்தா அடாவடி மாதிரி தெரியல. இவன அடிச்சுப் போட்ட கம்மனாட்டிங்க மட்டும் என் கையில கெடச்சா மீன் முள்ளாலேயே அவங்கோ கண்ணக்குத்தி வெளியில இழுத்தப்பூடுவேனாக்கும். இப்போ காட்டி ஆகபத்திரியில சேக்காக்காட்டி உசிரு பூடும்.”

எல்லாப் பெண்களும் சேர்ந்து அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஆட்டோக்களையும், வாடகைக் கார்களையும் கையாட்டி, காலாட்டிப் பார்த்தார்கள். இறுதியில் ஒரு வேன் வந்து நின்றது. முன்னால் டிரைவர் இருக்கை கொண்ட கூண்டும், பின்னால் தார்பாய் மேல்வாக்கில் படர்ந்த ஒரு சின்ன வேன். அதற்குள் காய்கறிகள் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடந்தன. ஏழெட்டுப்பேர் அந்த மூட்டைகளுக்கும், கூடைகளுக்கும் இடையே விரவி நின்றார்கள். மணல்மேட்டில் கிடப்பவனைப் பார்த்ததும், “துக்கித் தாங்கோ, தூக்கித் தாங்கோ” என்றார்கள். கீழே நின்ற பெண்கள் இளங்கோவை ரத்தம் சிந்தத் துாக்கி மேலே கொடுக்க, அங்கே நின்றவர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஒரு மூட்டையில் அவன் தலையை ஒருக்களித்து சாய்த்து உட்கார்ந்த நிலையில் வைத்தார்கள். அந்த டெம்போ வண்டியில் ருக்குமணியும் ஏறிக்கொண்டாள். அங்கே நின்ற பெண்ணும் ‘நானும் ஒத்தாசைக்கு வாரேன்க்கா’ என்று சொல்லியபடியே ஏறிக்கொண்டாள்.

அந்த வேன், கருண்டு வளைந்து ஓடியது. அங்கேயிருந்தவர்கள் ஏதோ பெரிய காரியம் செய்துவிட்டோம் என்ற பெருமிதமில்லாமல் அவனைப்பார்த்தார்கள். வெயிலில் காய்ந்து உறைந்துபோயிருந்த ரத்தத்துண்டுகளைக் கண்டார்கள். கத்தரிக்காய் காம்பு ஒன்று அவன் பிடரியில் குத்தியதைக் கண்ட ருக்குமணி ஒரு கையை பின்னால் கொண்டுபோய் அவன் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/146&oldid=636589" இலிருந்து மீள்விக்கப்பட்டது