பக்கம்:தாழம்பூ.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 133

வேறு வழியில்,போகப் போன வேன் டிரைவரை அந்த இருக்கையின் பிடரியில் தட்டித்தட்டி திரும்ப வைத்துப் பேசினாள்.

“இந்தப் பிள்ளாண்டான் எனக்குத் தம்பி மாதிரி. பெரிய இடத்துப் பிள்ளை. கொஞ்சம் அப்பால இதோட வீடிருக்கு. அங்க போய் அவங்கக்கிட்ட சொல்லணும். அப்புறமா ஆகவேண்டியதப் பார்க்கலாம். அண்ணாத்தே ஒன்னத்தான், வண்டியத் திருப்பு.”

பூக்காரப்பெண்ணுக்கு உதவியாக வேனில் ஏறியவள் இப்போது மிரண்டாள்.

நல்ல வேளையோ, கெட்ட வேளையோ கடிகாரம் கட்டிய ஒரு லுங்கிக்காரன் ருக்குமணிக்குப் புத்தி சொன்னான் :

“முதல்ல, இந்தப் பையன ஆசுபத்திரியில சேர்த்துடனும், நாம லேட் பண்ணுற ஒவ்வொரு நிமிஷமும் இவன் உயிரு போய்கிட்டிருக்கிறதா அர்த்தம். ஏதோவொரு ஆகபத்திரியில சேர்த்துட்டு, அப்புறமா அவங்க வீட்டுல போய் சொல்லிடு. இப்ப வீட்டப் பார்த்துப் போனா அப்புறம் அந்தப் பையன் காட்டப் பார்த்துப் போக வேண்டியிருக்கும்.”

வண்டி லேசாய் நின்றது, பிறகு கடிகாரக்காரன் சொன்னால் சரியாக இருக்கும் என்பதுபோல் அது வேறு பக்கமாய் திரும்பி ஓடியது. ருக்குமணியும் யோசித்தாள். அந்த வீட்டிற்குப் போனால் அந்தம்மா இருக்காங்களோ மாட்டாங்களோ, அதுக்கு வாச்சிருக்கிற பொண்ணு செத்தாக்கூட அழத்தெரியாத மடச்சாம்பிராணி, முதல்ல, இதக் காப்பாத்தணும். அப்பால மற்றத பாத்துக்கலாம்”

ருக்குமணி, அந்த வேன்வாசிகள் கேட்கும் முன்பே நடந்தவற்றை கோபாவேசமாகக் கண்களைக் கசக்கிக்கொண்டும், இடையிடையே திணறிக்கொண்டும், இதற்குக் காரணமான குப்பத்துக்காரியை வாய்க்கு வந்தபடி வைதுகொண்டும் விளக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/147&oldid=636590" இலிருந்து மீள்விக்கப்பட்டது