பக்கம்:தாழம்பூ.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36 தாழம்பூ

ருக்குமணி, அந்த வேன்வாசிகளை கையெடுத்துக் கும்பிட்டபடியே “பாம்புக்கு பாம்பின்கால் தெரியும் என்பது மாதிரி, ஏழைக்கு ஏழை ஒத்தாசை செய்தீங்க” என்றாள். உடனே கடிகார லுங்கி “ஒன் உதாரணம் சரியில்லே!” என்றான். “நாம என்ன பாம்புங்களா? அரசாங்கப் பூனை பிடிக்கிற எலிங்க..” என்றான்.

அந்த வேனிலிருந்து ருக்குமணியும், அவளுக்குத் தோழியாக வந்தவளும் கடிகார லுங்கியும் இளங்கோவை கீழே இறக்கப் போனபோது, அந்த மருத்துவமனையின் முகப்பில் நின்ற காரில் ஏறப்போன ஒரு ஸ்டெதாஸ்கோப் மனிதர், அங்கே வந்தார். அவர்கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரே வெளியே வந்தார். பணக்காரர்களுக்கு காலில் ஒரு முள் குத்தினாலும் அவர்களைப் படுக்க வைத்து ரத்தப் பரிசோதனை, சிறுநீர் சோதனை, எச்சில் சோதனை, எக்ஸ்ரே, தேவைப்பட்டால் ஸ்கேனிங் என்று முள்ளை எடுப்பதற்குப் பதிலாக அந்த முள்ளை காலிலிருந்த கண்ணுக்குள் தள்ளிவிட்டு விடும் அந்த டாக்டருக்கு அந்த அன்னக்காவடிகளின் கையிலிருந்த கேஸ் தேறாதது போல் தோன்றியது. கேஸ் தேறினாலும் ‘காஷ் தேறாது. அவர்கத்தினார்:

“என்னய்யா வேணும் உங்களுக்கு?

“இவருக்குக் காயம், ஆக்சிடென்ட், இல்லயில்ல... அடிபட்டுட்டு. தப்பு தப்பு அடிச்சிட்டாங்க”

“போலீசுக்குக் கொண்டுபோக வேண்டிய கேச எதக்குய்யா ஆகபத்திரிக்கி கொண்டு வறிங்க? இவர இங்க சேர்த்துட்டு, நானும் கோர்ட்டு கோர்ட்டா அலையனுமா? இவர நீங்களே அடித்துக் கொண்டு வந்திருக்கு மாட்டிங்க என்கிறது என்ன நிச்சயம்? போலீசுக்குப் போய் அப்புறமா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போங்கோ.”

“அது எங்களுக்குத் தெரியும்.” “தெரிஞ்ச பிறகும் இங்க எதுக்கு வந்தீங்க?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/150&oldid=636594" இலிருந்து மீள்விக்கப்பட்டது