பக்கம்:தாழம்பூ.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 37

“வேன்ல வந்தா இப்படிப் பேசிடுவீங்க. ஏர்-கண்டிஷன் கார்ல வந்தா இப்படிப் பேசுவீங்களா?”

“யோவ், மரியாதையா போரீங்களா, இல்ல நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்யவா?”

“அந்த வியாபார டாக்டர் அப்படிச் செய்தாலும் செய்வார் என்று பயந்துபோன வேன்காரர்கள், இளங்கோவைத் துாக்கி பழையபடியும் கத்தரிக்காய் மூலையில் கிடத்தினார்கள். ஆனாலும், அந்தக் கடிகார லுங்கிக்காரனுக்கு மனம் கேட்கவில்லை. கோபம் அடங்கவில்லை. வேன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தபோதே அவன் கத்தினான் :

“யோவ் டாக்டரு நீயெல்லாம் ஒரு டாக்டரா? பேசாம கழுத்துல கிடக்கிற ஸ்டெதாஸ்கோப்புலயே தூக்குப் போட்டுச் சாகவேண்டிய ஆளு நீ”

அந்த வேன் துள்ளிக்குதித்து ஓடியது. பெரும்பாலான சாலைகளில் ரக்கைக் கட்டாமலேயே பறந்தது. இருபத்திநான்கு மணிநேர கிளினிக்குகளும், அரிமா சங்கங்கள் நடத்தும் சமூகசேவை மருத்துவமனைகளும் வழியடைத்தன. பெரிய பெரிய மருத்துவ மனைகளை நெருங்குவதற்கு இந்த வேனுக்கு பயம். “இதற்கு மேலும் வண்டியை ஒட்ட டீசல் இல்லை” என்று டிரைவர் உள்ளேயிருந்து கத்தினார். இந்தச் சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் ருக்குமணியைப் பார்த்தபோது அவளுக்குத் தோழியாகத் தன்னைத்தானே நியமித்துக் கொண்டவள் “அந்தண்ட நிறுத்துங்க” என்றாள். அவள் சொன்ன இடத்தில் ஒருபாடாவதி மருத்துவமனை. ருக்குமணியும் அந்தப் பெண்ணும் காய்கறிக்காரர்கள் தூக்கிக் கொடுத்த இளங்கோவை தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு அவனை தங்களது தோள்களில் போட்டபடியே அந்த மருத்துவமனையின் ஒரு கல் தூணில் சாய்த்தார்கள். ருக்குமணி அவளைப் பார்த்து “இங்கேயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/151&oldid=636595" இலிருந்து மீள்விக்கப்பட்டது