பக்கம்:தாழம்பூ.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}.38 தாழம்பூ

சேர்க்காட்டா’ என்றாள். உடனே அந்தப் பெண் ‘சேர்க்க வைக்கிறேன் பார்” என்றாள். இதற்குள் ஒய்யாரமான மூன்று நாற்காலிகளில் ஒரு தலை மேலே தென்பட்டது.வரவேற்புப் பெண் கத்தினாள் :

“என்ன வேணும்? போங்கப் போங்க! இதென்ன சத்திரமா, சாவடியா?”

அந்தப் பெண் போட்ட சத்தத்தில் அவளுக்கு அருகேயுள்ள நாற்காலியில் உட்கார்ந்து ஆர்ச் மாதிரி இருந்த மேசையில் தலையைப் போட்டுக்கொண்டிருந்த ஒரு முப்பது வயத ஆசாமி நிமிர்ந்தான்.அவனுக்கு சிகிச்சையளிக்கவே ஒரு முழு மருத்துவமனை தேவை. அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டு அவள் பக்கமாக வந்தான் :

“அடேடே, நீயா? என்னம்மா விஷயம்? யார் இது?” “ஸ்பெஷல் இருக்குண்ணே. ஒனக்குன்னு நாலு கிளாச எடுத்து வச்சிருக்கேன்.”

“சித்தநேரத்துலவந்துடறேன். டாக்டர்ரவுண்டு முடியட்டும்.” “அப்புறம் அண்ணே. இது பெரிய இடத்துப் பிள்ளாண்டான். எப்படியோஏடாகூடமாருடந்துட்டு நீதாண்ணேஇங்கசேக்கணும்.”

“அதெப்படி, நான் என்ன டாக்டரா?” “இந்தாண்ணே ஐம்பது ருவா, யாருக்காவது கொடுக்கணும்னா கொடுத்து.”

“சரி, ஒசப்படாம நில்லு, ரூம் ரெடி பண்ணிட்டு, கொடுக்க வேண்டியவங்களுக்குக் கொடுத்துட்டு வாறேன்.”

அந்த நோஞ்சான் பேர்வழி தூணில் சாய்த்து வைக்கப்பட்ட நோயாளியை ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு மாடிப்படிகளில் ஏறினான். அந்த ஐம்பது ரூபாயும் அவனுக்குத்தான் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/152&oldid=636596" இலிருந்து மீள்விக்கப்பட்டது