பக்கம்:தாழம்பூ.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 139

அவளுக்கும் தெரியும். ஆனாலும் அவன் சுயமரியாதையை குந்தகப்படுத்தாமல் பேசியதில் அவளே பெருமைப்பட்டாள்.'அடடே. எனிக்கிக்கூட புத்தியிருக்கே.

இதற்குள் ஐந்து நிமிடத்தில் அந்த ஆசாமி கீழே வந்துவிட்டான். அவன் பின்னால், இரண்டு பையன்கள் ஸ்டெச்சரோடு வந்தார்கள். அவர்கள் இளங்கோவை அந்த ஸ்டெச்சரில் துாக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது அந்த ஆசாமி சரோசாவிடம் சாவகாசமாகப் பேசினான் :

“இந்த நர்சிங்ஹோமில் கிரவுண்டுல ரூம் கிடையாது. மாடியிலதான் பேஷன்ட் பார்க்கிறாங்க. யாராவது ஹார்ட் பேஷன்ட்டா இருந்தா அவங்களையும் ஸ்டெச்சர்லதுாக்கிக்கிட்டு மாடிப்படி வழியா நடந்து போகணும். அப்பவே அந்த ஆசாமி டொக்குனு போயிடுவான். லிப்ட் இல்லாம நர்சிங்ஹோம் மாடி இருக்கக்கூடாதுங்கிறது சட்டம். ஆனால் இந்தக் காலத்துல சட்டமா பேகது? காசில்லா பேசுது? அப்புறம் சரோசா, அந்த ஸ்பெஷல் இருக்குமா இல்ல வேற யாராவது..?”

‘ஒனக்குன்னு வெச்சத ஒனக்குத் தாரேண்ணே. கம்மா ‘கும்'முன்னு இருக்கும். அப்புறண்ணே, இந்தப் பிள்ளாண்டான நல்லாக் கவனிக்கணுமுண்ணே.”

பூக்கார ருக்குமணி அவளை இப்போது ஸ்பெஷலாகப் பார்த்தாள். சந்தேகம் இல்லை. அதே தத்தேறி முண்டதான். போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியில இதோ ஸ்டெச்சருல கிடக்குற பிள்ளாண்டானும், அதுக்கு சம்சாரமாய் வாரவளும், நானும், இளநீர் குடிக்கப்போ இவள சரியாப் பார்க்கவ; அப்போபைஜாமா, இப்போ சேலை. இவள விடப்பிடாது.

ருக்குமணி ஆகாயம் அதிர்வதுபோல் கத்தினாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/153&oldid=636597" இலிருந்து மீள்விக்கப்பட்டது