பக்கம்:தாழம்பூ.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தாழம்பூ

“ஏண்டி, எச்சிக்கல நாயே கொழுந்தையையும் கிள்ளி, தொட்டிலயும் ஆட்டறியா? அரகொற உயிரோட துடிச்சிக்கிட்டு இருக்கிற இந்தப் பிள்ளாண்டான விஷ ஊசி போடணும்னு இந்த எச்சிக்கல ஆஸ்பத்திரியில சேர்க்கப் பார்க்கிறீயா? மவளே! ஒன்ன விடமாட்டேன்டீ. நீ ஜெயிலுல கம்பி எண்ணாம இருக்க முடியாதுழ.”

ருக்குமணி ஆவேசப்பட்டாள். மாடிப்படிகளில் ஸ்டெச்சரில் சவாரி செய்து கொண்டிருந்த இளங்கோவின் பக்கம் குய்யோ முய்யோ என்று கத்திக்கொண்டே ஓடினாள். அந்த ஸ்டெச்சரைப் பிடித்து இழுத்தாள்.

பூக்கார ருக்குமணி போட்ட கூச்சலில் வரவேற்புக்காரி வசந்தா திடுக்கிட்டு எழுந்தாள். அதற்குள் ஒரு டெலிபோன், அதுவும் காதலனிடமிருந்து. அந்த டெலிபோன் குமிழை ஆசைப்பட்டவனின் முகமாக அனுமானித்துக்கொண்டு அதைக் கன்னத்தில் போட்டுப் புரட்டி சிரிப்பும் சிணுங்கலுமாய் “நீங்க ஒண்ணும் பேச வேண்டாம்” என்று பேசியபடியே மீண்டும் இருக்கையில் உட்கார்ந்தாள். காதல் பேச்சுக்கு முன்னால் எந்தக் கூச்சல் எடுபடும்?

சரோசாவும் மாடிப்படிகளில் தாவிக்குதித்துப் போனாள். கோபமாகப் பார்த்தருக்குமணியை அவள் கூனிக்குறுகிப்பார்த்தாள். ‘ஏன் இப்படிக்கத்துறேன்னு திருப்பிக் கேட்க நினைத்தாள். ஆனால் வாய்க்குள் நாக்குப் புரளவில்லை. என்றாலும், ருக்குமணியின் தோளைப்பிடித்துத் தன் பக்கமாக இழுத்தாள். இதற்குள் சத்தம்கேட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/154&oldid=636598" இலிருந்து மீள்விக்கப்பட்டது