பக்கம்:தாழம்பூ.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.4. தாழம்பூ

“ஆபத்துக்குத் தோஷமில்லேன்னு சேர்த்துட்டேன். நான் இருந்ததால டிபாசிட் பணம் கட்டாமலே சேர்த்தாச்சு. ஆனால் அப்படி டிஸ்சார்ஜ் செய்ய முடியாது. குறைஞ்சது ஆயிரம் ரூபா கறந்துடுவாங்க. என்ன சொல்றே சரோசா?”

“அந்தக் கவலையே உனக்கு வேண்டாமண்ணே. இன்னும் ஒரு அவர்ல தந்துடறேன். நீ ஸ்பெஷலுக்கு வரப்போ தலையை அடகு வச்சாவது தாறேன். அண்ணன் என்ன உதவாமலா போயிடுவாரு? என்னவோ என் போதாத காலம்.”

சரோசா மேற்கொண்டு பேச முடியாமல் அரைகுறை வார்த்தைகளோடு விக்கி நின்றாள். உள்ளே பயங்கரமான சத்தம். ருக்குமணிக்கு, டாக்டர் விஷ ஊசி போடுகிறாரோ என்று இன்னும்கூட சந்தேகம். சரோசாவை முறைத்தாள். ஸ்பெஷல் பேர்வழி விளக்கம் கொடுத்தார்:

‘நெத்திக் காயத்துக்கு டாக்டர் தையல் போடுறார்னு நெனைக்கேன். எப்படியோ ஆசாமி தப்பிச்சிட்டான். ஏன் சரோசா, இவனப் பார்த்தா பட்டைக் கேஸாத் தெரியல. நல்ல பையனாய் தோணுது. அப்படி இருக்கையில் உன் வழில் எப்படி வந்தான்.”

“அது பெரிய கதை அண்ணாத்தே. சொன்னாலும் தீராது, சொல்லியும் மாளாது. அந்தச் சக்களத்தி, பொறம்போக்கு முண்டை, என்னை எந்த நேரத்துல பெத்துப்பூட்டாளோ, அப்பவே.”

‘சரி சரி, நான் கீழே போய், வசந்தாவை சமாளிக்கேன். காசுன்னு வந்துட்டா காதலனையும் மறந்துடறவள். சீக்கிரமாவா, ஸ்பெஷல் போட்டாப்போலவும் ஆச்க... ஆஸ்பத்திரி காச வாங்கினாப்லயும் ஆச்சு.”

இப்போதே சரக்கை மோப்பம் பிடித்தபடி நோஞ்சான் ஆசாமி போனதும், தனித்து விடப்பட்ட ருக்குமணியும் சரோசாவும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. பிறகு பூக்காரியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/158&oldid=636602" இலிருந்து மீள்விக்கப்பட்டது